தமிழகத்தில் 7 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
1. அயல் பணிக்குச் சென்று தமிழகம் திரும்பிக் காத்திருப்போர் பட்டியலில் இருந்த டிஜிபி பிரஜ் கிஷோர் ரவி, தமிழ்நாடு மின்வாரிய விஜிலென்ஸ் பிரிவு டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
2. தமிழ்நாடு போலீஸ் அகாடமியின் ஏடிஜிபியாகப் பதவி வகிக்கும் அம்ரேஷ் புஜாரி, தொழில்நுட்பப் பிரிவு ஏடிஜிபியாக மாற்றப்பட்டுள்ளார்.
3. தொழில்நுட்பப் பிரிவு ஏடிஜிபியாக உள்ள டேவிட்சன் தேவாசிர்வாதம், தமிழ்நாடு போலீஸ் அகாடமியின் ஏடிஜிபியாக மாற்றப்பட்டுள்ளார்.
4. மத்திய அரசின் அயல் பணியிலிருந்து தமிழகம் திரும்பிக் காத்திருப்போர் பட்டியலில் இருந்த ஏடிஜிபி சந்தீப் மிட்டல், விரிவாக்கப் பிரிவு ஏடிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
5. விரிவாக்கப் பிரிவு ஐஜியாகப் பதவி வகிக்கும் ஜோஷி நிர்மல் குமார், தலைமையிடத்து ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
6. தலைமையிடத்து ஐஜியாகப் பதவி வகிக்கும் செந்தாமரைக் கண்ணன், அமலாக்கப் பிரிவு ஐஜியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
7.சென்னை உயர் நீதிமன்ற வழக்குகள் பிரிவு உதவி ஐஜியாகப் பதவி வகிக்கும் சுதாகர், சென்னை சைபர் கிரைம் பிரிவு கண்காணிப்பாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.