கோவை: கோவை அண்ணாசிலை சிக்னலில் காவல் துறை இயக்குனரும் குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறை தமிழ்நாடு மற்றும் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் நிறுவனருமான டாக்டர் பிரதீப். வி.பிலிப் ஐபிஎஸ்., அவர்கள் தலைமை தாங்கி இலவச ஹெல்மெட் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
ஹெல்மெட் அணியும் சட்டம் வந்தவுடன் தமிழகத்தில் 30% விபத்து குறைந்துள்ளது என்பதை தெரிவித்தார். தமிழக காவல்துறை இயக்குநர் திரிபாதி அவர்கள் இதை மிகச்சிறப்பாக நடைமுறைப்படுத்தி வருகிறார் என்பதை தெரிவித்தார்.
கோவை அரிமா சங்க மாவட்ட ஆளுநர் திரு. கரணபூபதி அவர்கள், பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் ஒருங்கிணைப்பாளர் கலாம் மக்கள் அறக்கட்டளை நிறுவனர் நேரு நகர் அரிமா சங்க செயலாளர் செந்தில்குமார், ஜீவசுரக்ஷா தன்வந்திரி மருத்துவமனை டாக்டர் பிரசன்னா மணிகண்டன், மண்டல தலைவர் அரிமா காளியப்பன், வட்டார தலைவர் அரிமா ரகுபதி, ஜி எல் டி ஒருங்கிணைப்பாளர் அரிமா ராம்குமார், கோவையில் சிட்டி அரிமா சங்கம் நேரு நகர் அரிமா சங்கத்தில் தலைவர் லாலா.ஜி.முத்துராஜ், செயலாளர் நந்தகுமார், முன்னாள் தலைவர் லோகநாதன், துருவா என்டர்பிரைசஸ் தீபக், கலாம் மக்கள் அறக்கட்டளை வெங்கடேஷ், கிருஷ்ணமூர்த்தி, மீசை பாலா, மகேஷ், ஐயப்பன், ரமணி ஆகியோர் கலந்து கொண்டனர்.
குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறை, காவல் துணை கண்காணிப்பாளர் ரவிக்குமார், காவல் ஆய்வாளர் குமார், காவல் ஆய்வாளர் முத்துமாலை மற்றும் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் நண்பர்கள் கலந்து கொண்டு சுமார் 500 ஹெல்மெட் வழங்கி சிறப்பித்தனர்.