அம்மா உணவகங்கள் தொடர்ந்து செயல்படும்.
சாலையோர உணவகங்கள் அனுமதிக்கப்பட மாட்டாது.
மளிகை, காய்கறி, இறைச்சிக் கடைகள் நண்பகல் 12 மணி வரை திறந்திருக்க அனுமதி
நியாயவிலைக் கடைகள் காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரை செயல்படும்.
காய்கறி- பூ விற்பனை செய்யும் நடைபாதைக் கடைகள் நண்பகல் 12 மணி வரை அனுமதிக்கப்படும்.
பூங்காக்கள், உயிரியல் பூங்காக்கள், அருங்காட்சியகங்கள் இயங்க அனுமதி இல்லை.
முழு ஊரடங்கு காலத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட மாட்டாது.
அனைத்து உணவகங்களிலும் பார்சல் சேவை மட்டும் வழங்க அனுமதிக்கப்படும்.
தேநீர்க் கடைகள் நண்பகல் 12 மணி வரை மட்டும் செயல்பட அனுமதிக்கப்படும்.
நடைபெற்று வரும் கட்டடப் பணிகள் அனுமதிக்கப்படும்.
அத்தியாவசியப் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் செயல்படலாம்.
அனைத்து தனியார் அலுவலகங்களும் இயங்கத் தடை விதிக்கப்படுகிறது.
அத்தியாவசியத் துறைகளைத் தவிர்த்து மாநில அரசு அலுவலகங்கள் எதுவும் இயங்காது.
தொலைத் தொடர்பு மற்றும் அதனைச் சார்ந்த செயல்பாடுகளுக்கு அனுமதி.
இன்றும், நாளையும் அனைத்துக் கடைகளும் காலை 6மணி முதல் இரவு 9 மணி வரை இயங்கும்.
பேருந்துகள் இயங்காது :
மாவட்டங்களுக்குள் மற்றும் மாவட்டங்களுக்கு இடையிலான தனியார், அரசுப் பேருந்து போக்குவரத்துக்கு தடை.
வாடகை டாக்சி, ஆட்டோக்கள் ஆகியவை இயங்கவும் தடை.
அத்தியாவசியப் பணிக்கு செல்வோர் உரிய ஆவணங்களுடன் பயணிக்க வேண்டும்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி