இந்திய அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டு, குடியரசு நாடாக தன்னை இந்திய நாடு அறிவித்துக்கொண்ட ஜனவரி, 26ஆம் நாள் ஆண்டு தோறும் குடியரசு தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. 1950ஆம் ஆண்டு தொடங்கிய குடியரசுப்பயணம் 72ஆவது ஆண்டை இந்த எட்டுகிறது. ஆண்டுதோறும் குடியரசு தினத்தன்று நாடெங்கும் உள்ள காவல்துறையினரில் வீரதீர செயல்புரிந்த காவலர்களுக்கு விருதுகள் வழங்கப்படும்.
தமிழக காவல்துறை சார்பில் வழக்குகளை சிறப்பாக புலனாய்வு செய்த காவலர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினவிழா மற்றும் சுதந்திர தினவிழாவில் விருதுகள் வழங்கப்படுகின்றன. இதன்படி இந்த ஆண்டு காவல்துறையின் உயரிய விருதான ‘குடியரசுத் தலைவர் காவல் பதக்கம்’ ஏ.டி.ஜி.பி. டேவிட்சன் தேவாசிர்வாதம், ஐஜி பி.மணிகண்டகுமார், மற்றும் சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் ஆகியோர்க்கு இன்று வழங்கப்பட்டது.
குடியரசு தினத்தையொட்டி தமிழகத்தை சேர்ந்த காவலர்கள், காவல் அதிகாரிகளுக்கு இந்திய காவல் பதக்கம் அறிவிக்கப்பட்டது.. சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி அன்பு மற்றும் சந்தோஷ் குமார் உள்பட 17 பேருக்கு இந்திய காவல் பதக்கம் வழங்கப்படுகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு முன் 1994 ஆம் ஆண்டு தமிழக முதல்வரின் பொது சேவையில் சிறந்து விளங்குவதற்கான போலீஸ் பதக்கமும், சிறப்பான சேவைக்கான போலீஸ் பதக்கமும், கடமைக்கான சிறந்த பக்திக்கான முதலமைச்சரின் பதக்கம் ஐ.பி.எஸ் அதிகாரி மகேஷ்குமார் அகர்வாலுக்கு வழங்கப்பட்டது.
சென்னையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
அப்துல் ஹாபிஸ்