ஐந்து ஐபிஎஸ் அதிகாரிகளை நேற்று தமிழக அரசு மாற்றியுள்ளது. இதற்கான உத்தரவை உள்துறைச் செயலர் நிரஞ்சன் மார்டி பிறப்பித்துள்ளார்.
மாற்றப்பட்டவர்கள் விபரம்:
1. மத்திய மண்டல ஐஜியாக பொறுப்பு வகிக்கும் திரு.வரதராஜு மாற்றப்பட்டு, திருச்சி மாநகர ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
2. திருச்சி காவல் ஆணையர் திரு.அமல்ராஜ் மாற்றப்பட்டு, மத்திய மண்டல ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
3. அமலாக்கப்பிரிவு ஐஜி திரு.ஜெயராமன் மாற்றப்பட்டு. சென்னை காவல் ஆணையரக கூடுதல் ஆணையர் (நிர்வாகம்) நியமிக்கப்பட்டுள்ளார். இது புதிதாக உருவாக்கப்படும் பதவி ஆகும்.
4.சென்னை ராஜ்பவன் கேம்ப் எஸ்.பி. திரு. தேஷ்முக் ஷேகர் சஞ்ஜய், மாற்றப்பட்டு மயிலாப்பூர் துணை ஆணையராக நியமிக்கப்படுகிறார்.
5. மயிலாப்பூர் துணை ஆணையர் திரு.எ.ஜெயலட்சுமி மாற்றப்பட்டு, சிபிசிஐடி சைபர் பிரிவு எஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இவ்வாறு உள்துறைச் செயலர் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது..