தூத்துக்குடி எஸ்.பி.யாக இருந்த ஜெயக்குமார் சிபிசிஐடி சிறப்பு புலனாய்வு பிரிவு எஸ்.பி.யாக நியமனம் செய்யப்பட்டிருக்கிறார்.
தமிழக அமைச்சர் கே.என். நேருவின் சகோதரர் ராமஜெயம் கடந்த 2012-ம் வருடம் மார்ச் 29-ம் தேதி திருச்சியில் நடைப்பயிற்சி சென்ற போது படுகொலை செய்யப்பட்டார்.
தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த கொலை தொடர்பாக சிபிசிஐடி போலீசார், சிபிஐ விசாரணை நடத்தி வந்தனர்.
தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமார் தலைமையில், அரியலூர் டி.எஸ்.பி. மதன், சென்னை சிபிஐ-யை சேர்ந்த ரவி ஆகியோர் அடங்கிய குழு விசாரிக்க வேண்டும்; அடுத்தகட்ட விசாரணையைச் சிறப்புக் குழு புலனாய்வு தொடர வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில், தூத்துக்குடி எஸ்.பி.யாக இருந்த ஜெயக்குமார் சிபிசிஐடி சிறப்பு புலனாய்வு பிரிவு எஸ்.பி.யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி.யாக பாலாஜி சரவணனை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
சென்னை குற்றப்பிரிவு ஐஜி காமினி தாம்பரம் காவல் ஆணையரக கூடுதல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அமலாக்கத்துறை ஐஜி விஜயகுமாரி ஆவடி காவல் ஆணையரக கூடுதல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.