சென்னை : மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே. பழனிசாமி அவர்களை 22.01.2021 ம் தேதியன்று தலைமைச் செயலகத்தில் போக்குவரத்து துறை அமைச்சர் திரு. எம்.ஆர். பாஸ்கர் அவர்கள் சந்தித்து உச்சநீதிமன்ற சாலை பாதுகாப்பு குழு வழிகாட்டுதலின் படி 2014ஆம் ஆண்டை அடிப்படையாகக் கொண்டு கடந்த நவம்பர் 2020 வரை 54.04 சதவீதம் உயிரிழப்புகள் குறைக்கப்பட்டதை கருத்தில்கொண்டு புதுடெல்லியில் 18.01.2021 அன்று நடைபெற்ற சாலை பாதுகாப்பு மாத தொடக்க விழாவில் தமிழகத்திற்கு வழங்கப்பட்ட விபத்தை தடுப்பதில் சிறந்த மாநிலத்திற்கான தேசிய விருதினை காண்பித்து வாழ்த்து பெற்றார். உடன் தலைமைச் செயலாளர் திரு.க.சண்முகம்¸இ.ஆ.ப¸ உள்¸ மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் திரு.எஸ்.கே.பிரபாகர் இ.ஆ.ப¸ காவல்துறை தலைமை இயக்குநர் திரு. J.K. திரிபாதி இ.கா.ப. கூடுதல் தலைமைச் செயலாளர் / போக்குவரத்து ஆணையர் திரு.தென்காசி சு.ஜவஹர் இ.ஆ.ப மற்றும் காவல்துறை உயர் அலுவலர்கள் கலந்துக்கொண்டனர்.