தமிழகத்தின் திருநெல்வேலி, செங்கல்பட்டு, கடலூர், ராமநாதபுரம், தூத்துக்குடி மற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களுக்கு புதிதாக கூடுதல் காவல் கண்காணிப்பாளராக புதிதாக பயிற்சி முடித்த 7 ஐபிஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதன்படி வேலூர் சப்-டிவிஷன் கூடுதல் காவல் கண்காணிப்பாளராக திரு.ஆல்பர்ட் ஜான், IPS அவர்களும், திருநெல்வேலி மாவட்ட வள்ளியூர் சப்-டிவிஷன் கூடுதல் காவல்துறை கண்காணிப்பாளராக, திரு.சாமே சிங் மீனா, IPS அவர்களும், செங்கல்பட்டு மாவட்ட செங்கல்பட்டு சப்-டிவிஷன் கூடுதல் காவல் கண்காணிப்பாளராக திரு.அதர்ஷ் பச்சேரா,IPS அவர்களும், கடலூர் மாவட்டம் நெய்வேலி சப்டிவிசன் கூடுதல் காவல் கண்காணிப்பாளராக டாக்டர்.புக்யா ஸ்நேகா பிரியா,IPS அவர்களும், ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் சப்-டிவிஷன் காவல் கூடுதல் கண்காணிப்பாளராக திரு.தீபக் சிவாஜ்,IPS அவர்களும், தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சப்-டிவிஷன் கூடுதல் காவல் கண்காணிப்பாளராக திரு.ஹர்ஸ் சிங்,IPS அவர்களும், திருவண்ணாமலை மாவட்டம் திருவண்ணாமலை டவுன் சப்டிவிஷன் காவல் கூடுதல் கண்காணிப்பாளராக, செல்வி.கிரண் சுருதி,IPS அவர்களும் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.
அவர்களில் திருவண்ணாமலை டவுன் சப்டிவிஷன் காவல் கூடுதல் கண்காணிப்பாளராக, செல்வி.கிரண் சுருதி ஐபிஎஸ் அவர்கள் சமீபத்தில் பிரதமர் மோடியுடன் கலந்துரையாடி வாழ்த்து பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
காவல் பணியில் நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகள் அனைவருக்கும் போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.