தஞ்சாவூர் : பல்வேறு திருட்டு வழக்குகளில் சம்பந்தப்பட்ட தஞ்சாவூர் புறப்பகுதியை சேர்ந்த கணேசன் என்பவரை ஒரு வழக்கின் சம்மந்தமாக தண்டணை தரப்பட்டு அவரை திருச்சி சிறையில் ஒப்படைக்க காவல்துறையினரால் நேற்று (27-7-2022) மாலை சுமார் ஆறு மணி அளவில் தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டார். அப்போது குற்றவாளி திடீரென்று காவல்துறையினர்களின் காவலில் இருந்து எதிர்பாராத விதமாக தப்பித்து ஓடிவிட்டார்.
அதனை தொடர்ந்து தப்பித்து ஓடிய குற்றவாளியை தஞ்சை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அவர்கள் தனிப்படை போலீஸ் உதவி ஆய்வாளர் ராஜேஷ் குமார் மற்றும் தலைமை காவலர்கள், திரு. உமாசங்கர், திரு. ராஜேஷ் , காவலர்கள் அருள்மொழிவர்மன், அழகு சுந்தரம், நவீன், சுஜித் ஆகியோர் அடங்கிய தனிப்படை போலீசார் தீவிர தேடுதலில் ஈடுபட்டு வந்தார்கள் , அப்பொழுது தஞ்சை புறப்பகுதியான இனத்துக் கானப்பட்டியில் குற்றவாளி கணேசன் ஒளிந்து இருப்பதாக தகவல் கிடைத்தது அதனை தொடர்ந்து அங்கு சென்ற தனிப்படை போலீஸார் முப்புதரில் ஒளிந்து இருந்த அவனை சுற்றி வளைத்து மேற்கண்ட குற்றவாளியை கைது செய்து நேற்று இரவு திருச்சி மத்திய சிறைச்சாலை அதிகாரிகள் வசம் ஒப்படைத்தார்கள் . தப்பி ஓடிய குற்றவாளியை சில மணி நேரத்தில் கண்டுபிடித்து கைது செய்த தனிப்படை போலிசாரை காவல்துறை உயர் அதிகாரிகள் பாராட்டி வருகிறார்கள்.
போலீஸ் நியூஸ் பிளஸ் செய்தியாளர்
குடந்தை-ப-சரவணன்