தஞ்சை : தஞ்சை மாவட்டம், அம்மாபேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கோவிலூரில் வசித்து வரும் தங்கராஜ் என்பவர் கோவிலூரில் வீட்டினருகே காம்ப்ளக்ஸ் ஒன்று வைத்துள்ளார் இந்நிலையில் (24-3-2023) நேற்று இரவு சுமார் எட்டு மணி அளவில் அவரது வீட்டின் அருகே உள்ள காம்ப்ளக்ஸில் தங்கராஜ் மகன் செந்தில்குமார் வயது (45), அவரது நண்பரிடம் பேசிக் கொண்டிருந்தார். அப்பொழுது அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த அம்மாசி மகன் அர்ஜுனன் வயது (22) என்பவர் பேசிக் கொண்டிருக்கும் போது வாய் வார்த்தை முற்றி போகவே எதிர்பாராத விதமாக செந்தில்குமார் தான் மறைத்து வைத்திருந்த அருவாளை எடுத்து அர்ஜுனன் என்பவரை இரண்டு இடத்தில் வெட்டி விட்டு தப்பி ஓடிவிட்டார். இவ்விருவரும் வேவ்வேறு சமுகத்தினர் என்பதால் இப்பகுதியில் பதற்றமாக இருந்து வந்தது.
இச்சம்பவம் பற்றிய தகவல் கிடைத்த உடன் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்ட பாபநாச உட்கோட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திருமதி.பூரணி அவர்கள், வெட்டுப்பட்ட அர்ஜுனனை தஞ்சை மருத்துவமணைக்கு அனுப்பி வைத்தார் அங்கு அவருக்கு அவசர கால சிக்கிச்சை அளிக்கப்பட்டு வருகிறது . அதன் பின்னர் இச்சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளியை கைது செய்ய அவரது மேற்பார்வையில் அம்மாபேட்டை காவல் நிலைய ஆய்வாளர் திரு . கரிகால சோழன் அவர்களின் தலைமையில் அய்யம்பேட்டை காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. ராஜேஷ் குமார் மற்றும் முதல் நிலைக் காவலர் கோபி மற்றும் விக்ரம் ஆகியோர் அடங்கிய போலீசார் தஞ்சாவூர் அம்மாபேட்டை சாலியமங்கலம் ஆர் சித்திப்பட்டு என பல இடங்களில் தீவிர தேடுதலில் ஈடுபட்டு வந்த நிலையில் (மார்ச் 25-) இன்று காலை ஆர்சுத்திப்பட்டில் உள்ள ஒரு மாரியம்மன் கோயிலில் ஒளிந்திருப்பதாக ரகசிய தகவலின் அடிப்படையில் அங்கு சென்று சுற்றி வளைத்து தப்பி சென்ற செந்தில்குமாரை கைது செய்து அம்மாபேட்டை காவல் நிலையத்தில் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
போலீஸ் நியூஸ் பிளஸ் செய்தியாளர்