திருச்சி : திருச்சி மாநகர செஷன்ஸ் கோர்ட் காவல் நிலைய காவல் உதவி ஆய்வாளர் ஸ்ரீதர் தனது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி பெரிய மிளகுபாறை பகுதியில் வசிக்கும் பிற மாநிலத்தைச் சேர்ந்த உதவி தேவைப்படும் 87 இளைஞர்களின் உணவிற்கு தேவையான 50 கிலோ கோதுமை மாவு, 50 கிலோ வெங்காயம் மற்றும் 50 கிலோ உருளைக்கிழங்கு ஆகிய உணவுப் பொருள்களை தன்னுடைய சொந்த செலவில் வழங்கியுள்ளார். இச்செயலை திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்கள் வெகுவாக பாராட்டினார்கள்.