திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் தன்னிடம் தவறாக நடக்க முயன்றவரை கொலை செய்த பெண்ணை போலீசார் விடுதலை செய்துள்ளனர். திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி, திரு.Dr. வருண்குமார் உத்தரவின் பெயரில் அந்த பெண்ணை விடுதலை செய்துள்ளனர்.
பழங்குடி பெண்ணான அமுதா மீது அப்பகுதி காவல்துறையினர் கெலை வழக்கு பதிவு செய்து இருந்தனர்.
இந்த நிலையில் திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.வருண்குமார், IPC பிரிவு 100 ன் கீழ் அந்த பெண்ணை நேற்று விடுதலை செய்தார்.
நியாயம் அறிந்தவர்கள் கையில் அதிகாரம் இருந்தால்தான் சட்டத்திற்கு பெருமை.
திருவள்ளுர் இருந்து குடியுரிமை நிருபர் V.கோபி