மதுரை: தனது சொந்த விருப்பின் பேரில், சமுதாயத்துக்காக அல்லது இயற்கைச் சூழலைப் பாதுகாப்பது போன்றவற்றுக்காக ஊதியம் எதிர்பாராமல் உழைப்பவர் பல தன்னார்வலர்கள் அரசு சார்பற்ற அமைப்புக்கள் மூலம் தன்னார்வலர்கள் சேவை செய்கின்றனர். அந்த வகையில் உலக தன்னார்வ தொண்டு நிறுவன தினத்தை முன்னிட்டு, மதுரை அமெரிக்கன் கல்லூரி, தேனியில் ஆரோக்கிய அகம், ஆண்டிபட்டி அரசு கலை கல்லூரி மற்றும் அறிவியல் கல்லூரி ஆகியோர் சார்பில், தன்னார்வத் தொண்டுகளின் முக்கியத்துவம் மற்றும் ஆரோக்கியத்தின் செயல்பாடுகள் குறித்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடுகள் செய்திருந்தனர்.
மதுரை அமெரிக்கன் கல்லூரியில் முதலாமாண்டு சமூகப்பணி முதுகலை மாணவர் ஹரன் ராஜ் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். நிகழ்ச்சிக்கு, ஆண்டிபட்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் டாக்டர் சுஜாதா தலைமை வகித்தார். வணிகவியல் துறைத் தலைவர் டாக்டர் சதுரகிரி, மாணவர்களுக்கு தன்னார்வத் தொண்டு செய்வதால் ஏற்படும் நன்மைகளை பற்றி பேசினார். ஆரோக்ய அகம் உதவி இயக்குநர் முருகேசன், சமூக வளர்ச்சியில் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் பங்கு குறித்தும், மகளிர் மேம்பாட்டுத் திட்ட மேலாளர் சுஜாதா, என்.ஜி.ஓ க்களில் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலனின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். இந்நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு தன்னார்வத் தொண்டு மற்றும் சமூக நலனில் அதன் தாக்கம் பற்றிய மதிப்புமிக்க நுண்ணறிவுகளை வழங்கினார்கள். முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு பி.காம் மாணவர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி