இராமநாதபுரம் : காலை தனுஸ்கோடி காவல் நிலைய சரகம், முகுந்தராயர் சத்திரம் கடற்கரை பகுதியில் கஞ்சா கடத்தல் நடைபெற இருப்பதாக, இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் 9489919722 என்ற பிரத்யேக கைபேசி எண்ணிற்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதனை தொடர்ந்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr. V.வருண்குமார் IPS., அவர்களின் உத்தரவின்படி, தனிப்படையினர் SSI திரு.நல்லுசாமி, HC 1860 திரு.ராம்குமார், HC 886 திரு.ஜேம்ஸ் கிளிட்டஸ், HC 374 திரு.மாணிக்கம் ஆகியோர் முகுந்தராயர் சத்திரம் பகுதியில் சோதனை மேற்கொண்டதில், சுமார் 96 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.
நமது குடியுரிமை நிருபர்
ஆப்பநாடு முனியசாமி
இராமநாதபுரம்