வேலூர்: வேலூர் மாவட்டத்தில் 06.06.2021 அன்று சத்துவாச்சாரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த செயின் பறிப்பு வழக்கில் ஈடுபட்ட குற்றவாளிகளை கைது செய்ய வேலூர் சரக காவல்துறை துணைத் தலைவர் திரு.A.G. பாபு இ.கா.ப அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.செல்வகுமார் அவர்களின் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டது.
தனிப்படையினர் அப்பகுதியில் உள்ள CCTV காட்சிகளை ஆய்வு செய்து பதிவு எண் இல்லாத இருசக்கர வாகனத்தில் முகமூடி குல்லா மற்றும் மயில் கலர் T-shirt அணிந்த இரு குற்றவாளிகளை அடையாளம் கண்டு சத்துவாச்சாரியில் இருந்து பிள்ளையார்குப்பம் ராணிப்பேட்டை மாவட்டம் பூட்டுத்தாக்கு, விஷாரம், ஆற்காடு, மாசாபேட்டை, புங்கனூர், நாயக்கன் தோப்பு, மற்றும் திருவண்ணாமலை மாவட்டம்
கண்ணமங்கலம், சாத்து மதுரை, பென்னாத்தூர், ஊசூர் வரை மொத்தம் 90 கி.மி வரை பயணம் செய்தும் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து இறுதியாக அணைக்கட்டு பகுதியில் மூன்று நாட்களாக முகாமிட்டு தங்களுடைய அயராத மற்றும் திறமையான முயற்சியால் சம்பவம் நடந்த 9 நாட்களுக்குள் அணைக்கட்டு புதுமனை கிராமத்தைச் சேர்ந்த சுப்பிரமணி (20) த/பெ சம்பத் என்பவரை அடையாளம் கண்டு கைது செய்தனர்.
மேலும் அவனிடம் நடத்தப்பட்ட விசாரணையில் மற்றொரு குற்றவாளியான ஆந்திர மாநிலம் சித்தூரை சேர்ந்த ஜார்ஜ் லீ (26) த/பெ,நாராயணசாமி என்பவரையும் கைது செய்து இருவரையும் விசாரணை செய்ததில் அவர்கள் மாவட்டத்தில் மொத்தம் 12 செயின் பறிப்பில் வழக்கில் ஈடுபட்டுள்ளனர். எனத் தெரிய வருகிறது மேலும் அவர்களிடமிருந்து சுமார் 56.5 சவரன் நகைகளை கைப்பற்றி இன்று வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
மேலும் தனி படையினரின் திறமையான இச்செயலை பாராட்டும் விதமாக மாவட்ட காவல் அலுவலகத்திற்கு அவர்களை நேரில் வரவழைத்து காவல் கண்காணிப்பாளர் பாராட்டி சான்றிதழ்களை வழங்கினார்.