செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் பாலூர் பகுதியை சேர்ந்தவர் கெளதம்(38). இவர் அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவருக்கு கெளரி(35). என்கிற மனைவியும் இரண்டு மகள்களும் உள்ளனர். கெளரிக்கு நெஞ்சுவலி ஏற்ப்பட்டுள்ளது. அவரை செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையம் பின்புறம் தனியார் மருத்துவமனையான அமைந்துள்ள சாய் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர் கெளரிக்கு மாரடைப்பு ஏற்ப்பட்டுள்ளது. ஓரிடத்தில்தான் அடைப்பு ஏற்ப்பட்டுள்ளது. உடனே ஆபரேஷன் பண்ணினால் காப்பாற்றிடலாம். அச்சப்பட தேவையில்லை என மருத்துவமனை நிர்வாகம் உத்திரவாதம் அளித்துள்ளது. முதல்கட்டமாக 40ஆயிரம் மதிப்பிலான ஊசி செலுத்திய பிறகு அடுத்த கட்டம் ஆஞ்சியோகிராம் செய்தபிறகு ஆபரேஷன் செய்யவேண்டும். உடனே 2லட்ச ரூபாய் ரெடி பண்ணி வைத்து கொள்ளும்படி மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது.
கெளரியை காப்பாற்றிடலாம் என மருத்துவர் அளித்த உத்திரவாதத்தை நம்பி கெளரியின் கணவர் கெளதம் பணத்தையும் ரெடிபண்ணிவிட்டார். மாலை நேரத்தில் கெளரிக்கு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட்டபோது அறுவை சிகிச்சைப்பிரிவில் இருந்து செவிலியர்கள் மற்றும் மருத்துவர்கள் பதட்டத்தோடு உள்ளும் வெளியுமாக சென்றுவந்ததை கண்ட கெளரியின் தம்பி நேரடியாக உள்ளே சென்று அக்காவிற்கு என்னாச்சு ஏன் பதட்டமாக இருக்கிறீர்கள் என மருத்துவரிடம் கேட்டுள்ளார். கெளரிக்கு மேலும் இரண்டு இடத்தில் அடைப்பு ஏற்ப்பட்டுள்ளது. நாங்கள் சிகிச்சை அளித்து வருகிறோம். அடுத்த 10நிமிடத்தில் தெளிவாக சொல்கிறேன் என கூறிய மருத்துவர் அடுத்த பத்து நிமிடத்தில் கெளரி இறந்துவிட்டதாக சர்வ சாதாரணமாக கூறியுள்ளார். அதிர்ச்சியடைந்த கெளரியின் கணவர் மற்றும் உறவினர்கள் உள்ளே சென்று பார்த்தபோது கெளரி ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கும்போதே இறந்துபோனது தெரியவந்தது. ஏற்கனவே ஒரே ஒரு அடைப்பு இருப்பதாக கூறிய மருத்துவர் ஆபரேஷன்
செய்வதற்கு ஆஞ்சியோ செய்து வேறேதும் அடைப்பு இருக்கிறதா என பரிசோதித்த பிறகு ஆபரேஷன் செய்ய வேண்டும் என கூறிய மருத்துவர் ஆஞ்சியோ சிகிச்சை முடிவதற்கு முன்பாகவே எப்படி மேற்கொண்டு இரண்டு அடைப்புகள் இருப்பதாக முடிவுசெய்யமுடியும்.
சிகிச்சை அளிக்கும் போதே கெளரி இறந்ததை மறைத்து ஆஞ்சியோ சிகிச்சை முடிந்து மேலும் இரண்டு அடைப்பு இருப்பதாக கண்டறிந்தது போல் நாடகமாடுகிறார்கள். கெளரிக்கு தவறான சிகிச்சை அளித்ததினால்தான் உயிரிழந்தார். என உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு மருத்துவமனை நிர்வாகம் மற்றும் சிகிச்சை அளித்த இருதய சிகிச்சை சிறப்பு மருத்துவர் சுரேஷ்குமாரிடம் கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கெளரி இறந்த சம்பவம் உறவினர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து இது போன்ற மருத்துவமனையில் தமிழக அரசு தலையிட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அங்குள்ள பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செங்கல்பட்டில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அன்பழகன்
















