திருச்சி : திருச்சி திருப்பூரைச் சேர்ந்த சரவணன் என்பவர், சிசிடிவி கேமரா பணிக்கு வந்த போது ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் காவல் நிலையம் வெளியே, வாசலில் கிடந்த ஒரு பவுன் தங்க செயினை எடுத்து காவல் நிலைய ஆய்வாளர் இடம் ஒப்படைத்தார். பின்னர் ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் காவல்நிலைய ஆய்வாளரால் விசாரணை மேற்கொள்ளப்பட்டு நகையை அவர் உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டது. நகை உரியவரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று காவல் ஆய்வாளரிடம் நேர்மையாக ஒப்படைத்த செயலை பாராட்டும் விதமாக, திருச்சி மாநகர காவல் ஆணையர் முனைவர் லோகநாதன், IPS அவர்கள் நேரில் அழைத்து பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.