திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூர் பகுதியிலுள்ள தனியார் நிதி நிறுவன வங்கி பிரிவு மேலாளராகப் பணிபுரியும் திரு. ஜெய்சிங் பிரபு 38 என்பவர் திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ப. சரவணன் இ.கா.ப., அவர்களிடம் விருதுநகர் மாவட்டம், திருத்தங்கல், செங்கலநாட்சியார்புரம், வெள்ளையாபுரம், வடக்குதெருவைச் சேர்ந்த ரமேஷ் 27 என்பவர் கிளை மேலாளராகவும் தூத்துக்குடி மாவட்டம், மில்லர்புரத்தை சேர்ந்த பெருமாள்ராஜ் என்பவர் வட்டார மேலாளராகவும் பணிபுரிந்த தனியார் நிதி நிறுவன வங்கி கிளைகளில் உள்ள 216 பயனாளர்களின் குழுவில் கடன் பெற்ற நபர்களிடமிருந்து தவணை தொகையை பெற்று, கடன் பெற்ற நபர்களின் கணக்கில் வரவு வைக்காமல் தாங்களே எடுத்துக் கொண்டு வங்கியையும், பயனாளர்களையும் ஏமாற்றி நூதன முறையில் மோசடியில் ஈடுபட்டு ரூ. 37 லட்சம் பணத்தை நம்பிக்கை மோசடி செய்துள்ளனர்.
மேற்படி வங்கி கிளை மேலாளர் ரமேஷ் மீது நடவடிக்கை எடுக்கும்படி, திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களிடம், மேற்படி பிரிவு மேலாளர் அவர்கள் மனு அளித்தார். மனு மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி திருநெல்வேலி மாவட்ட குற்றப்பிரிவு, துணை காவல் கண்காணிப்பாளர் திரு. பொன்ரகு, அவர்களுக்கு உத்தரவிட்டதன் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் திரு. ப.முத்து அவர்கள், உதவி ஆய்வாளர் திரு. பவுல் மற்றும் தலைமை காவலர் திருமதி.தமிழ்செல்வி ஆகியோர் தீவிர விசாரணை மேற்கொண்டு வங்கியையும், பயனாளர்களையும் ஏமாற்றி பண மோசடி செய்த ரமேஷ்யை இன்று கைது செய்தனர்.
இவ்வழக்கில் சிறப்பாக புலன் விசாரணை செய்து எதிரியை துரிதமாக கைது செய்த மாவட்ட குற்றப்பிரிவு காவல் துறையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ப. சரவணன் இ.கா.ப., அவர்கள் வெகுவாக பாராட்டினார்.