திருச்சி: கடந்த (11.12.2023)-ந்தேதி, அரசு மருத்துவமனை காவல்நிலைய எல்லைக்குட்பட்ட ஆபீசர்ஸ் காலனியில் உள்ள தனியார் அலுவலகத்தில் சரித்திர பதிவேடு குற்றவாளி ஒருவரை அடையாளம் தெரிந்த நபர்கள் வெட்டி கொலை செய்ததாக பெறப்பட்ட புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்தும், அரியமங்கலம் அம்பிகாபுரத்தை சேர்ந்த குற்றவாளி லெட்சுமணன் வயது (38). மற்றும் 4 நபர்கள் கொலை செய்ததாகவும் தெரிய வந்தது. மேற்படி வழக்கில் லெட்சுமணன் மற்றும் 4 குற்றவாளிகளை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.மேலும், விசாரணையில் குற்றவாளி லெட்சுமணன் என்பவர் மீது அரியமங்கலம் காவல்நிலையத்தில் பொது அமைதிக்கு பங்கம் விளைவித்ததாக 3 வழக்குகளும், அடிதடி வழக்கு ஒன்றும், ஏர்போர்ட் காவல்நிலையத்தில் வழிப்பறி செய்ததாக ஒரு வழக்குகள் உட்பட 8 வழக்குகள் நிலுவையில் இருப்பதாக தெரியவந்தது.
குற்றவாளி லெட்சுமணன் என்பவரின் தொடர் குற்ற நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு அரசு மருத்துவமனை காவல் ஆய்வாளர் கொடுத்த அறிக்கையினை பரிசீலனை செய்த மாநகர காவல் ஆணையர் திருமதி.ந.காமினி, இ.கா.ப., அவர்கள் மேற்படி குற்றவாளியை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின்கீழ் கைது செய்ய ஆணையிட்டார்கள். அதனை தொடர்ந்து திருச்சி மத்திய சிறையில் உள்ள குற்றவாளிக்கு குண்டர் தடுப்பு சட்டம் ஆணையினை சார்வு செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.மேலும் இவ்வழக்கில் தொடர்புடைய அரியமங்கலத்தை சேர்ந்த ரவுடி அப்பு (எ) ஹரி கிருஷ்ணன் என்பவர் திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்களின் ஆணையின்படி ஏற்கனவே குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். திருச்சி மாநகரில் இது போன்ற கொலை குற்றங்களில் ஈடுபடுவோர் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்களால் கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.