திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூரில் தனியாருக்கு சொந்தமான மரக்கடை இயங்கி வருகிறது. வீடுகள் மற்றும் அலுவலகங்களுக்கு தேவையான கதவு, ஜன்னல், உள்ளிட்ட பல்வேறு மரச்சாமான்கள் இங்கு தயாரிக்கப்பட்டு வருகின்றன. தரைத்தளம் மற்றும் முதல்தளம் கொண்ட இந்த மரக்கடையில் காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டு கரும்புகையுடன் கொழுந்து விட்டு தீ எரிந்து வருகிறது. இதுகுறித்து அளிக்கப்பட்ட தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த பொன்னேரி மற்றும் அத்திப்பட்டு புதுநகரில் இருந்து 2வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கட்டிடத்திற்குள் உள்ள மரச்சாமான்களில் தீப்பற்றியுள்ள நிலையில் உள்ளே செல்ல முடியாததால் ஜெசிபி இயந்திரத்தின் மூலம் பக்கவாட்டு சுவற்றை உடைத்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து மணலி உள்ளிட்ட இடங்களில் இருந்து கூடுதலாக தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டுள்ளன. கொழுந்து விட்டு எரியும் தீயுடன் புகை மண்டலமாக இருப்பதால் சற்று மூச்சு திணறல் ஏற்பட்டுள்ள நிலையில் தொடர்ந்து தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். மரக்கடையில் கரும்புகையுடன் தீப்பற்றி எரிந்து வருவதால் பரபரப்பு நிலவி வருகிறது.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்
திரு. பாபு