திருவாரூர்: திருவாரூர் மாவட்டத்தில் தனியாக வசிக்கும் மூத்த குடிமக்களுக்கு பாதுகாப்பு கருதி E – Beat முறையினை அறிமுகப்படுத்தி அவர்களது பாதுகாப்பை உறுதி செய்ய திருவாரூர் மாவட்ட கண்காணிப்பாளர் திரு.V.R.ஸ்ரீனிவாசன் அவர்கள் புதிய முயற்சி
மேற்கொண்டுள்ளார்கள். அதன் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உத்தரவின் பேரில் காவல் விழுதுகள் என்ற பெயரில் குழு அமைக்கப்பட்டு அதற்காக ஒரு காவல் ஆய்வாளர் நியமிக்கப்பட்டுள்ளார். அக்குழுவினர் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தனியாக வசிக்கும் மூத்த குடிமக்களின் எண்ணிக்கையை கணக்கிட அப்பகுதியில் செல்லும் ரோந்து காவல் அலுவலர்கள் மூலமாக தனியாக வசிக்கும் மூத்த குடிமக்களின் வீடுகளுக்கு சென்று அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு கணக்கெடுத்துள்ளனர். திருவாரூர் மாவட்டத்தில்
உள்ள காவல் உட்கோட்டங்களில் 270 முத்த குடிமக்கள் (ஆண் 72, பெண்: 198 ) தனியாக வசித்து வருவதாக கண்டறியப்பட்டுள்ளது.
அனைத்து முத்த குடிமக்களின் வீடுகளிலும் பட்டா புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ளன. மேலும் பகல் மற்றும் இரவு நேரங்களில் அவற்றை தணிக்கைசெய்ய ரோந்து அதிகாரிகளுக்கு
மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் அறிவுறுத்தியுள்ளார்கள். இந்நிலையில் முத்த குடிமக்களின் வீடுகளுக்கு காவல்துறை அலுவலர்கள் சென்று சோதனை செய்வதை உறுதிபடுத்தும் வகையில் பட்டா புத்தக முறைக்கு பதிலாக E – Beat முறைக்கு அறிமுகப்படுத்துவதற்கு முத்த குடிமக்களின் வீடு இருக்கும் இடத்திற்கான அட்சரேகை மற்றும் தீர்க்கரேகை விபரங்கள் சேகரிக்கப்பட்டு தரவு தளங்கள் உருவாக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு மூத்த குடிமக்களுக்கும் QR குறியீடு உருவாக்கப்பட்டு அந்தந்த வீடுகளில் ஒட்டப்பட்டு அவற்றை காவல்துறை அலுவலர்கள் வருகையின்போது ஸ்கேன் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. E – Beat தமிழ்நாடு என்ற பயன்பாட்டில் காவல்துறை பணியாளர்களின்
விபர பட்டியல் மற்றும் அவர்களது தொடர்பு எண்கள் மற்றும் காவல்நிலைய தொடர்பு எண்கள் ஆகியவை புதுப்பிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பயன்பாட்டாளர்களுக்கும் தனித்தனியே ID
மற்றும் Password உருவாக்கப்பட்டுள்ளது. பின்னர் பயன்பாட்டாளர்கள் தங்களது மொபைல் பயன்பாட்டை தங்கள் தொலைபேசியிலிருந்த பயன்படுத்த பயிற்சியும் அவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது. முத்த குடிமக்களின் வீடுகளில் காவல்துறை அலுவலர்கள் சரியான நேரத்தில் சோதனை செய்கிறார்கள் என்பதை உறுதிப்படுத்திட இந்த தகவல் தொழில்நுட்ப முறை செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இத்தகைய காவல் விழுதுகள் திட்டத்தை திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் இன்று (14.07.2021) திருவாரூர் நகர காவல் சரகம், மேல சீதனகட்டளை பகுதிக்கு சென்று
அங்கே வசிக்கும் 1).கிருஷ்ணாம்மாள் 2).ஜெகதாம்பாள் ஆகியோரின் வீடுகளுக்கு சென்று E – Beat டிக்கெட் ஒட்டி இத்திட்டத்தை துவக்கி வைத்தார்கள் மேற்படி தணிக்கைகளை மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறையில் நேரடியாக கண்காணிக்கவும், நடைமுறைபடுத்தவும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் ஏற்பாடு செய்துள்ளார்கள்.
இத்திட்டம் மாவட்டம் முழுவதும் 270 இடங்களில் நடைமுறை படுத்தப்பட்டுள்ளது என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.