திண்டுக்கல் : (03.09.2022 ), திண்டுக்கல் மாவட்டம் நகர் பகுதியில், தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் கடத்தப்படுவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.பாஸ்கரன் அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் தனிப்படை காவல்துறையினர் திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். சோதனையின் போது பழனியில் இருந்து மணப்பாறை நோக்கி சென்று கொண்டிருந்த பழனியைச் சேர்ந்த காளிராஜ் (57), என்பவரை சோதனை செய்ததில் அவரிடம் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் இருப்பது தெரியவந்ததது. இதையடுத்து காளிராஜை திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டதில் அவரிடமிருந்து ரூ 17,96,900/- மதிப்புள்ள 22,120 லாட்டரி சீட்டுகளை தனிப்படை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும் காளிராஜ் மீது நகர் வடக்கு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினார்கள்.