மதுரை : மதுரை மாவட்ட காவல்துறையின் துரித நடவடிக்கையால் பல்வேறு குற்றச் சம்பவங்கள் மதுரை புறநகர் மாவட்டத்தில் குறைந்துள்ளது. மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் மதுரை மாவட்டத்தில் திருட்டு, வழிப்பறி போன்ற குற்ற செயலில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்கள். கடந்த (23.03.23), ம் தேதி மதுரை மாவட்டம், திருமங்கலம் உட்கோட்டம், கள்ளிக்குடி காவல் நிலைய சரகத்தில் உள்ள குராயூர் கிராமம், கிழக்கு தெருவில் குடியிருந்து வரும் அய்யனார் என்பவரின் மனைவி கௌசல்யா என்பவர் வீட்டில் தனியாக இருந்த போது அவரிடம் கத்தியை காட்டி, மிரட்டி அவர் வீட்டில் இருந்த (29) சவரன் தங்க நகையை கொள்ளையடித்து சென்றுவிட்டனர். மேற்படி கௌசல்யா கொடுத்த புகாரின் பேரில் கள்ளிக்குடி காவல் நிலைய குற்ற எண் 54/2023, பிரிவு 452, 394 இ.த.ச வாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் மேற்படி சம்பவம் தொடர்பான குற்றவாளிகளை கண்டுபிடிக்க மதுரை மாவட்ட கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின் பேரில் திருமங்கலம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திரு.வசந்தகுமார் அவர்களின் மேற்பார்வையில் திருமங்கலம் உட்கோட்ட தனிப்படை சார்பு ஆய்வாளர் திரு.மாரிகண்ணன், தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளபட்டது.
விசாரணையில் மேற்படி குற்றச்செயலில் ஈடுப்பட்ட முத்துகிருஷ்ணன், (32), த/பெ. மச்சகாளை, ராமகொத்தன் சந்து, தெற்கு தெரு, திருமங்கலம், பாலாஜீ, வயது (34), த/பெ. லெட்சுமணன், ஜெயம் ஸ்ரீ நகர், பொற்காலம் நகர், திருமங்கலம், பிளாவடியான், (32), த/பெ.நடராஜன், கீழத் தெரு, குராயூர், கள்ளிக்குடி தாலுகா ஆகியோர்களை தனிப்படையினர் கைது செய்து அவர்களிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட 29 சவரன் தங்கநகைகள் கைப்பற்றப்பட்டுள்ளது. மேற்படி குற்றவாளிகளை கைது செய்து நகைகளை கைப்பற்றிய தனிப்படையினரை மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் வெகுவாக பாராட்டினார். மேலும், இது போன்ற குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சிவபிரசாத் இ.கா.ப அவர்கள் எச்சரித்துள்ளார்கள்.
திரு.விஜயராஜ்