திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை பகுதியில் பள்ளி அருகே அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக டிஎஸ்பி. இலக்கியா அவர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் வடமதுரை காவல் ஆய்வாளர் கண்ணன் தலைமையில் தனிப்படையினர் அப்பகுதியில் தீவிர சோதனை மேற்கொண்டு பள்ளி அருகே புகையிலை பொருட்கள் விற்பனை செய்த மாரிமுத்து மற்றும் கண்ணன் ஆகிய 2 பேரை கைது செய்து விசாரணை செய்கிறார்கள்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா