திண்டுக்கல் : திண்டுக்கல் வழியாக பெங்களூரில், இருந்து மதுரைக்கு காரில் குட்கா கடத்துவதாக கண்காணிப்பாளர் திரு.பாஸ்கரன், அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் கண்காணிப்பாளர் தனி படையினர் சார்பு ஆய்வாளர் திரு.சேக் தாவூத், மற்றும் காவலர்கள் கொடைரோடு, அம்மையநாயக்கனூர் சோதனை சாவடியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர் அப்போது வேகமாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்ததில் காரில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா கடத்தியது தெரிய வந்தது.
இதனை அடுத்து குட்கா கடத்திய கள்ளக்குறிச்சியை சேர்ந்த வாலிபர் சிவக்குமார் (29), கைது செய்து காரில் இருந்த 270 கிலோ குட்கா மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய கார் ஆகியவற்றை பறிமுதல் செய்து அம்மையநாயக்கனூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர் இது குறித்து அம்மையநாயக்கனூர் காவல்துறையினர், விசாரணை செய்துவருகின்றனர்.
