சிவகங்கை : சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.செந்தில்குமார் அவர்கள் உத்தரவின் பேரில் போதைப்பொருள் தடுப்பு தனிப்படை செயல்பட்டு வருகின்றது, தனிப்படை சார்புஆய்வாளர் திரு.பார்த்திபன், அவர்கள் தனது குழுவுடன் சேர்ந்து
(27/ 12 /2022) அன்று நாச்சியாபுரம் காவல் நிலைய சரகம் மானகிரியில் வாகன தணிக்கை
TN 63 BW8087 TIGAR CAR நிறுத்தி சோதனை செய்தபோது அதில் போதை பொருட்கள் கடத்தி வந்ததை அறிந்து, அதில் பயணித்த வினோத்கண்ணன், விக்னேஷ் வரன்,பெனாசிர் டான்,
சரத்குமார், ஆகிய நான்கு பேரையும் பிடித்து விசாரணை செய்கையில் மானகிரி சாலையில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து அந்த வீட்டில் போதை பொருள் பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்தது, அதனை அறிந்து புகையிலை பொருட்கள் 1,450 /_ கி. கிராம் பணம்- 2,13,600/- ஆகியவற்றை கைப்பற்றி , நான்கு குற்றவாளிகளையும் நாச்சியாபுரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்து, முறையாக நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி