மதுரை : திருநெல்வேலி மாவட்டம் குட்டம், பகுதியைச் சேர்ந்த இரண்டு நபர்கள் அவர்கள் வந்த இருசக்கர வாகனத்தை மதுரை இராம்நாடு ரிங் ரோட்டில் இருந்து சுமார் 100 மீட்டர் தொலைவில் உள்ள தனியார் பழக்கடைக்கு அருகே நிறுத்தி அவர்களது செல்போனில் GPS மூலம் வழித்தடத்தை பார்த்துக் கொண்டிருந்த போது, அந்த நேரத்தில் அங்கு இரண்டு இருசக்கர வாகனத்தில் வந்த நான்கு நபர்கள் குமார் மற்றும் சங்கர்கணேஷ் ஆகியோர்களை கத்தியால் கழுத்து மற்றும் தோள்பட்டை ஆகிய இடங்களில் கொடூரமாக தாக்கி அவர்களிடமிருந்து இரண்டு செல்போன்களையும் அவர்கள் வந்த இருசக்கர வாகனத்தையும் வழிப்பறி செய்து தப்பி சென்றுள்ளார்கள். இது சம்பந்தமாக காவல் துறையினருக்கு தகவல் கிடைக்கப்பெற்று, உடனே இரவு ரோந்து அலுவலில் இருந்த சிலைமான் காவல் நிலைய ஆய்வாளர் திரு. மோகன், சிறப்பு சார்பு ஆய்வாளர் செந்தில், காவல் ஆளிநர்கள் மற்றும் தனிப்பிரிவு காவலர்கள் துரிதமாக செயல்பட்டு, பாதிக்கப்பட்ட நபர்களை சரியான நேரத்தில் மருத்துவச் சிகிச்சைக்கு உட்படுத்தியதோடு மட்டுமின்றி குற்றம் நடைபெற்ற 2 மணி நேரத்திற்குள் மேற்படி குற்றவாளிகளை கண்டுபிடித்து அவர்கள் பறித்துச் சென்ற இருசக்கர வாகனம், இரண்டு செல்போன்கள் மற்றும் சம்பவத்திற்கு பயன்படுத்திய இரண்டு இருசக்கர வாகனங்கள் மற்றும் ஒரு கத்தி ஆகியவற்றை குற்றவாளிகளிடமிருந்து கைப்பற்றினர்.
மேற்படி கைது செய்த நபர்கள் மீது சிலைமான் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து, மேற்படி நபர்களை விசாரணை செய்த போது இவர்கள் பல்வேறு காவல் நிலையங்களில் குற்ற செயல்களில் ஈடுபட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரியவந்துள்ளது
மேற்படி வழிப்பறி வழக்கில் சம்பவம் நடந்த இரண்டு மணி நேரத்திற்குள் விரைந்து நடவடிக்கை எடுத்து குற்றவாளிகளை கைது செய்து, பறித்துச் செல்லப்பட்ட வாகனங்கள் மற்றும் செல்போன்களை பறிமுதல் செய்ததோடு பாதிக்கப்பட்டவர்களை விரைவாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து குறிப்பிட்ட நேரத்திற்குள் சிகிச்சை அளிக்க ஏற்பாடுகள் செய்து, காப்பாற்றிய சிலைமான் காவல் நிலைய ஆய்வாளர் திரு.மோகன்,சார்பு ஆய்வாளர் திரு. அர்ஜுன், சிறப்பு ஆய்வாளர் திரு.செந்தில் காவல் ஆளிநர்கள் மற்றும் தனிப்பிரிவு காவலர்களை மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் வெகுவாக பாராட்டினார்கள் மேலும், மதுரை மாவட்டத்தில் திருட்டு வழிப்பறி போன்ற குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தொடர்ந்து இதுபோன்று சம்பவங்கள் ஈடுபடுபவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. சிவப்பிரசாத் இ.கா.ப அவர்கள் கடுமையாக சேர்த்துள்ளார்கள்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி