திருச்சி : திருச்சி மாநகரில் நேற்று (07.11.2)2-ந் தேதி காந்திமார்க்கெட் மற்றும் கோட்டை காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இந்திய சட்ட விதிமுறைகளுக்கு எதிராகவும், முறையான அனுமதியில்லாமலும் வெளிநாடு சிகரெட்டுகளை விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின்பேரில் அதிரடி சோதனை நடத்தப்பட்டதில் பெரியசாமி டவரிலும், பெரியகடைவீதியில் உள்ள கடைகளிலும் எச்சரிக்கை குறியீடுகள் மற்றும் நிக்கோடின் அளவு இல்லாத தடை செய்யப்பட்ட வெளிநாடு சிகரெட் பாக்கெட்டுகள் விற்பனை செய்தவர்களை கைது செய்தும், மொத்தம் சுமார் ரூ.4000/- மதிப்புள்ள வெளிநாடு சிகரெட் 40 பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தும் சம்மந்தப்பட்ட நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் பள்ளி மற்றும் கல்லூரிக்கு அருகே இளைஞர்களையும், சமுதாய சீரழிவையும் ஏற்படுத்தும் வகையில் கஞ்சா, குட்கா மற்றும் வெளிநாடு சிகரெட் பொருட்களை விற்பனை செய்வோர் மீது சட்டரீதியான கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என திருச்சி மாநகர காவல் ஆணையர் திரு.G.கார்த்திகேயன் இ.கா.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.