கோவை: கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.செல்வநாகரத்தினம் இ.கா.ப., அவர்கள் உத்தரவின்பேரில் சட்டவிரோதமான செயல்களில் ஈடுபடுபவர்களை கைது செய்யும் விதமாக சுல்தான்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உதவி ஆய்வாளர் திரு. குப்புராஜ் அவர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது,
சட்டவிரோதமாக தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனைக்கு வைத்திருந்த சூலூர் பகுதியை சேர்ந்த காளியப்பன் என்பவரது மகன் வெள்ளியங்கிரி 57. மற்றும் பொன்னுசாமி என்பவரது மகன் செல்வகுமார் 38. ஆகிய இருவரையும் கைது செய்து அவர்களிடமிருந்து கேரள லாட்டரி சீட்டுகள்-48 மற்றும் ரூபாய் 680/- ஆகியவற்றை பறிமுதல் செய்து மேற்படி நபரை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினார்.
