சிவகங்கை : சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ரோஹித் நாதன் ராஜகோபால் இ.கா.ப., அவர்கள் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என மாவட்ட காவல்துறையினருக்கு உத்தரவிட்டிருந்தார்.
இதனைத் தொடர்ந்து நேற்று 05.12.2020-ம் தேதி மாவட்டம் முழுவதும் தீவிர சோதனையில் ஈடுபட்ட காவல்துறையினர், அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனையில் ஈடுபட்ட 149 நபர்களை COTPA Act-ன் கீழ் கைது செய்தனர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி