மதுரை: மதுரை மாவட்டத்தில் அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்வதை தடுக்கும் பொருட்டு மேலூர் உட்கோட்டம் கொட்டாம்பட்டி சொக்கலிங்கபுரம் பெட்டிக்கடை அருகே சார்பு ஆய்வாளர் திரு. கமலமுத்து மற்றும் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த நான்கு சக்கர வாகனத்தை சோதனை செய்தபோது அதில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனைக்கு எடுத்து வந்த நபர்களை போலீசார் கைது செய்தனர்.
மேற்படி, கைது செய்த நபர்களிடமிருந்து விற்பனைக்கு வைத்திருந்த தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் 65 கிலோ 683 கிராம் மற்றும் புகையிலை எடுத்து வந்த நான்கு சக்கர வாகனம் ஒன்றும் இருசக்கர வாகனம் ஒன்றும் பறிமுதல் செய்து, மேற்படி நபர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து, மேல் நடவடிக்கை எடுத்தனர்.
மேலும், இது போன்ற தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்குபவர்கள், மற்றும் விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அவர்கள், தெரிவித்துள்ளார்கள்