இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் காவல் ஆய்வாளர் திரு.மோகன் மற்றும் சார்பு ஆய்வாளர் திரு.ராமர் ஆகியோர் தலைமையில் காவலர்கள் முதுகுளத்தூர் பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனையை தடுக்கும் விதமாக தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இந்நிலையில், முதுகுளத்தூர் பேருந்து நிறுத்தம் அருகே தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்த அப்துல் ரகுமான், தங்கராஜ், அபூபக்கர் மற்றும் நவாஸ்ஷெரீப் ஆகிய 4 நபர்களை ஆய்வாளர் திரு.மோகன் அவர்கள் COTPA Act-ன் கீழ் கைது செய்தார்.
இராமநாதபுரத்திலிருந்து
நமது குடியுரிமை நிருபர்
P.நம்பு குமார்
இராமேஸ்வரம்