பெரம்பலூர்: பெரம்பலூர்புதிய பேருந்து நிலையத்தில் அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் விற்பனை செய்வதாக கிடைத்த இரகசிய தகவலின்படி பெரம்பலூர் உட்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர் திரு.சரவணன் அவர்களின் தலைமையிலான தனிப்படையினர் பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் சென்று அங்குள்ள கடைகளில் சோதனையிட்டதில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்த 1. கோவிந்த்சிங் 21/21, S/o கிஷ்வர் சிங் , ஸ்ரீராம் காம்ளாக்ஸ், பழைய பேருந்து நிலையம், பெரம்பலூர்.
2. சம்புசிங் 22/21, S/0 மோடசிங், 3.விக்ரம் சிங் 27/21, S/0மோட சிங், இருவரும் ராம் தியேட்டர் அருகில், எளம்பலூர் ரோடு, பெரம்பலூர் மற்றும் 4.மாது 38/21, S/o திருப்பதி, KK நகர், துறைமங்களம், பெரம்பலுர் ஆகிய நான்கு பேரையும் விசாரணை செய்ய அவர்கள் விற்பனைக்காக வைத்திருந்த *46 கிலோ மதிப்புள்ள குட்கா பொருட்கள் மற்றும் பணம் ரூபாய் 50,000* ஆகியவற்றை வைத்திருப்பது தெரிய வரவே மேற்படி பொருட்களை பறிமுதல் செய்தும் நான்கு நபர்களையும் பெரம்பலூர் காவல் நிலையம் அழைத்து வந்து வழக்கு பதிவு செய்தனர்.
அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த நபர்களை திறம்பட செயல்பட்டு மேற்படி பொருட்களை கைப்பற்றிய பெரம்பலூர் துணைக் காவல் கண்காணிப்பாளர் திரு.சரவணன், திரு.செந்தில்குமார், காவல் ஆய்வாளர், திரு.மணிகண்டன், உதவி ஆய்வாளர், மற்றும் தலைமைக் காவலர்கள் திரு.அலொக்ஸாண்டர், திரு.ரமேஷ், முதல் நிலைக் காவலர் திரு.லெட்சுமணன், மற்றும் காவலர் திரு.ராஜவேல். ஆகியோர்களை பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ச.மணி அவர்கள் வெகுவாக பாராட்டினார்கள்.
என்றும் மக்கள் பாதுகாப்பிற்காக
பெரம்பலூர் மாவட்ட காவல்துறை