சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே நடுவிக்கோட்டையில் மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது. இந்நிலையில் 100 க்கும் மேற்பட்ட காளைகளுடன் நடுவிக்கோட்டை வயல்வெளியில் காளை வளர்ப்போர் திரண்டனர்.
மஞ்சுவிரட்டை காண ஆயிரக்கணக்கானோர் வந்திருந்தனர். பின்பு ஆங்காங்கே கட்டுமாடுகளாக வயல்வெளியில் காளைகளை உரிமையாளர்கள் அவிழ்த்து விட்டனர். என வந்த தகவலை அடுத்து போலீசார் கண்மாய், வயல் பகுதியிலும் காளைகளுடன் வந்தவர்களை வெளியேற எச்சரித்தனர்.
அப்போது அவிழ்த்து விடப்பட்ட காளை ஒன்று காவல் ஆய்வாளர் திரு.சுந்தர மகாலிங்கம் மீது முட்டியது. இதில் பலத்த காயமடைந்த அவர் காரைக்குடி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். தடையை மீறி மஞ்சுவிரட்டு நடத்தியதாக நாச்சியாபுரம் போலீசார் அப்பகுதியை சேர்ந்த 5 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்