சென்னை: கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்கும் பொருட்டு, கு.வி.மு.ச. பிரிவு 144 கீழ் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்பேரில், சென்னை பெருநகரில் தடையை மீறி வெளியிடங்களில் அத்தியாவசியமின்றி சுற்றுபவர்கள், ஒன்று கூடுபவர்கள். மாஞ்சா நூல் தயாரிப்பவர்களும், அதைக் கொண்டு பட்டம் பறக்க விடுபவர்கள் மற்றும் சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவோர்களை கண்டறிந்து நடவடிக்கைகள் எடுக்கும்படி சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப,. அவர்கள் உத்தரவிட்டதின்பேரில், அனைத்து காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான காவல் குழுவினர் அவர்களது காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தீவிரமாக கண்காணித்து, நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக J-3 கிண்டி காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர், நேற்று (28.05.2020) மாலை சுமார் 05.35 மணியளவில், கிண்டி, பாரதிநகர், M.G.R தெருவில் கண்காணிப்பு பணியிலிருந்தபோது, அங்கு தடையை மீறி காற்றாடி பறக்கவிட்ட 1.வேம்புலி, வ/23, கிண்டி, 2.வினோத், வ/18, கிண்டி, 3.அஜய், வ/19, கிண்டி, 4.அருண், வ/18, கிண்டி ஆகிய 4 நபர்களை கைது செய்து அவர்களிடமிருந்து 4 காற்றாடிகள் மற்றும் 1 மாஞ்சா நூல் கண்டு ஆகியவை கைப்பற்றப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.