மதுரை : மதுரை மாவட்டம், கோவில்பாப்பாகுடி கிராமத்தில் தடையற்ற மின்சாரம் வழங்க கோரி ப்ளக்ஸ் பேனரில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. இப்பகுதியில் சுமார் 1000 க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இதில் மகரிஷி பள்ளி வரை திருப்பாலை மின் நிலையத்திலிருந்தும் மீதமுள்ள பகுதிகளுக்கு சமயநல்லூர் மின் நிலையத்திலிருந்து மின் இணைப்புகள் வழங்கப்படுகிறது. திருப்பாலை மின் நிலையத்திலிருந்து மின் இணைப்புகள் பெறப்பட்ட குடியிருப்புகளுக்கு அதிக அளவில் மின்தடை ஏற்படுவதில்லை. ஆனால் சமயநல்லூர் மின் நிலையத்திலிருந்து மின் இணைப்பு பெறப்படும் பகுதிகளுக்கு அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. இதனால் இப்பகுதி மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வந்தனர். இதற்கு காரணம் சமயநல்லூர் மின் நிலையத்திலிருந்து கோவில் பப்பாகுடிக்கு வரக்கூடிய மின் பாதைகள், தோப்புகள் மற்றும் வயற்காடுகள் மிகுந்த பகுதியாக உள்ளதால் சிறிது மழை, காற்று அடித்தால் கூட மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு விடுகிறது. பல நாட்கள் இரவு முழுவதும் மின் இணைப்பு இல்லாமல் அவதிப்பட்டு வந்துள்ளனர். மேலும் சமீப காலமாக இப்பகுதியில் கொள்ளையர்கள் நடமாட்டம் அதிகமாகி வருவதால் மின்தடை ஏற்படுவது கொள்ளையர்களுக்கு சாதகமாக அமைந்து விடுகிறது. சமீப காலமாக நகர்ப்புறங்களில் இருந்து புறநகர் பகுதியான இப்பகுதிக்கு அதிக அளவில் வீடுகள் கட்டி மக்கள் குடி பெயர்ந்து வருகின்றனர். இதனால் இப்பகுதி அதிகளவில் மக்கள் குடியேறும் பகுதியாக மாறி வருகிறது. அதற்கேற்ப மின் கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படவில்லை.
புதிதாக வீடு கட்டி வருவதால் AC மெஷின்கள், ஹீட்டர் மிஷின்கள், போன்ற அதிக அளவில் மின் உபயோகப் பொருட்கள் பயன்படுத்தின்றனர். அதற்கேற்ப மின் டிரான்ஸ்பார்மர்கள் அமைக்கப்படவில்லை எனவே கோவில் பாப்பா குடியின் மீதமுள்ள அதிகபட்சம் சுமார் 400 வீடுகளுக்கு மட்டும் சமயநல்லூர் பகுதியில் இருந்து மின் இணைப்பு கொடுக்கப்பட்டிருப்பதால் மீதமுள்ள இந்த பகுதிகளுக்கும் திருப்பாலை மின் நிலையத்திலிருந்து மின் இணைப்பு கொடுக்க வேண்டும் அல்லது இப்பகுதிகளுக்கு அதிக சக்தி திறன் கொண்ட டிரான்ஸ்பார்மர் அமைக்கப்பட்டு தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும், என்று கோரிக்கை வைத்து வருகின்றனர். இதற்கு மின் வாரியம் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை, எனவே இன்றைய தினம் இப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் பிளக்ஸ் பேனரில் முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு மனு எழுதி அதில் கையொப்பமிட்டு அந்த பிளக்ஸ் பேனரையே முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு அனுப்ப முடிவு செய்துள்ளனர். அதன் அடிப்படையில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி அளவில் இப்பகுதியில் உள்ள சங்க நிர்வாகிகள் மற்றும் குடியிருப்பு பொதுமக்கள் ஒன்று திரண்டு பிளக்ஸ் பேனரில் கையொப்பமிட்டனர் 408 பேர் இதில் கையெழுத்திட்டுள்ளனர். விரைவில் இந்த ப்ளக்ஸ் பேனரை முதலமைச்சர் தனிப்பிரிவுக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளனர். இதன் மூலமாகவாவது எங்களுக்கு விமோசனம் கிடைக்கும் என்று நம்புகிறோம், இதற்கான முயற்சிகளை சகாயம், பொறியார்வேலுமணி, மணிவண்ணன், ராஜசேகரன் சண்முகம் டெய்லர் கண்ணன், சண்முகநாதன், ஆட்டோ கண்ணன் மற்றும் இப்பகுதி இளைஞர்கள் இதற்கான முயற்சிகளை மேற்கொண்டு உள்ளனர்.
மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு. ஆண்டனி வினோத்