திருவாரூர்: திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார், M.Sc. (Agri)., அவர்கள் உத்தரவின் படி திருவாரூர் மாவட்டத்தில் சட்டவிரோத செயல்களுக்கு எதிராக அதிரடி வேட்டை நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் நன்னிலம் உட்கோட்டம், குடவாசல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பெட்டிக்கடையில் பொதுமக்களுக்கு கேடு விளைவிக்க கூடிய தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் (குட்கா) விற்பனை செய்த – குடவாசல், கடம்பங்குடி, மேலத்தெருவை சேர்ந்த மருதையன் மகன் ராமலிங்கம் என்பவர் (வயது-64) கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார். மேற்படி, நபர் விற்பனைக்காக வைத்திருந்த சுமார் ரூ.47,500/- மதிப்பிலான தடைசெய்யப்பட்ட குட்கா 35 பண்டில்கள், கூல்லிப் 14 பண்டில், விமல் பாக்கு 64 பண்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
சிறப்பாக செயல்பட்டு குற்றவாளியை கைது செய்து, தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த குடவாசல் காவல் உதவி ஆய்வாளர் திரு.கோபிநாத் மற்றும் காவலர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார், M.Sc., (Agri)., அவர்கள் பாராட்டினார்கள். பொதுமக்களுக்கு கேடு விளைவிக்கும் கஞ்சா, தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை, மது குற்றங்களில் ஈடுபடுவோர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார், M.Sc. (Agri)., அவர்கள் கடுமையாக எச்சரித்துள்ளார்கள்.