மதுரை : மதுரை மாவட்டத்தில், அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனையை தடுக்கும் பொருட்டு, மாவட்டத்தில் காவல்துறையினர் , பல்வேறு இடங்களில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். மதுரை மாவட்டத்தில் அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்வதை தடுக்கும் பொருட்டு கீழவளவு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கீழையூர் – அட்டப்பட்டி ரோடு பிரிவு அருகே காவல்துறையினர் , தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனைக்கு எடுத்துச் சென்ற சாதிக், சாகுல் ஹமீது, அலிப் கான் ஆகிய மூன்று நபர்களை காவல்துறையினர், கைது செய்தனர்.
மேற்படி, கைது செய்த நபர்களிடமிருந்து விற்பனைக்கு வைத்திருந்த, தடை செய்யப்பட்ட புகையிலை பண்டல்கள் சுமார் 240 கிலோ புகையிலைப் பொருட்கள் மற்றும் அபே சிட்டி ஆட்டோ ஒன்று, இரண்டு இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்து, மேற்படி நபர் மீது காவல்துறையினர், வழக்கு பதிவு செய்து, மேல் நடவடிக்கை எடுத்தனர். மேலும், இது போன்ற தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்குபவர்கள், மற்றும் விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திரு சிவபிரசாத் ஐ.பி.எஸ், அவர்கள், எச்சரித்துள்ளார்கள்.
மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி