சென்னை : சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.மகேஷ்குமார் அகர்வால், இ.கா.ப அவர்கள் இன்று (05.03.2021) காலை எழும்பூர் காவலர் மருத்துவமனையில் கொரோனா தொற்று தடுப்பு ஊசி மருந்தை செலுத்திக்கொண்டார். இதனை தொடர்ந்து கூடுதல் ஆணையாளர் தலைமையிடம் முனைவர் திரு.A.அமல்ராஜ், இ.கா.ப அவர்கள் மற்றும் சென்னை பெருநகர காவல் அதிகாரிகள், ஆளினர்கள் கொரோனா தடுப்பு ஊசி மருந்தை செலுத்திக் கொண்டனர்.
சென்னையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.சாஹித் உசேன்
மாநில தலைவர்
இளம் குடியுரிமை நிருபர்கள் பிரிவு
நியூஸ்மீடியா அசோசியேசன் ஆப் இந்தியா