திருநெல்வேலி : திருநெல்வேலி மாநகரத்தில் கடந்த 2013 ம் ஆண்டு, ஒரு இளம்பெண் காணாமல் போன சம்பவம் புகார் கூட ஆகாத நிலையில், அந்தப் பெண் அப்போதே கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டுள்ளார். குற்றவாளிகள் எல்லா தடயங்களையும் மறைத்துவிட்டு வாழ்ந்து வந்த நிலையில், 6 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த மாதம் கிடைத்த ஒரு சிறு துருப்பை அடிப்படையாக கொண்டு, திறமையாக துப்புதுலக்கி கொலையான நபரை கண்டறிந்து, கொலைக் குற்றவாளிகள் நால்வரையும் கைது செய்து சிறைக்கு அனுப்பிய காவல்துறையினரை இன்று 21-12-2019ம் தேதியன்று, நெல்லை மாநகர காவல் ஆணையாளர் திரு.தீபக் மோ. டாமோர் (இ.கா.ப) அவர்கள், சான்றிதழையும் பரிசும் வழங்கினார்.
திறமையாக செயல்பட்ட திருநெல்வேலி டவுன் உதவி ஆணையர் திரு.சதீஷ்குமார் அவர்கள், தச்சநல்லூர் காவல் நிலைய ஆய்வாளர் திரு.வனசுந்தர் அவர்கள், சார்பு ஆய்வாளர் திரு.சோழராஜன், தலைமைக் காவலர்கள் திரு.முருகன், திரு.செல்லப்பா, மகாராஜன், சண்முகநாதன் ஆகியோரை நெல்லை மாநகர காவல் துணை ஆணையாளர் திரு.சரவணன் (சட்டம் மற்றும் ஒழுங்கு) அவர்கள் பாராட்டினார்கள்.
நெல்லையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
T. சுதன்
தேசிய பொது செயலாளர்
சமூக சேவகர்கள் பிரிவு
திருநெல்வேலி