தஞ்சாவூர்: தஞ்சை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திருமதி .ரவளி பிரியா காந்தபுனேனி ஐ.பி.எஸ் அவர்களின் உத்தரவின் படி எதிர் வரும் தீபாவளி திருநாளையொட்டி பொருள் வாங்க வரும் பொதுமக்களுக்கு எந்த ஒரு அசம்பாவிதமும் நடக்காமல் பாதுகாப்பு வழங்கிட தஞ்சை தனிப்படை போலீஸ் உதவி ஆய்வாளர் திரு.ராஜேஷ் குமார் சிறப்பு உதவி ஆய்வாளர் திரு.மோகன் தலைமை காவலர் திரு.உமாசங்கர் மற்றும் காவலர்கள் திருஅருண்மொழி திரு.அழகு சுந்தரம் திரு.நவீன் மற்றும் திரு. சுஜித் ஆகியோர்கள் அடங்கிய தனிப்படை போலீசார்கள் தஞ்சை பகுதியில் தீவிர வாகன சோதனை மற்றும் கண்காணிப்பு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தார்கள்.
இந்நிலையில் தஞ்சை தனிப்படை போலீசார் நேற்று தஞ்சை பேருந்து நிலையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போது சந்தேகம் படும் படியாக நின்ற மூன்று நபர்களை அழைத்து விசாரணை செய்தார்கள்.
அப்போது அவர்கள் அளித்த பதில் முன்னுக்கு ,பின் முரணாக இருந்ததாலும் அதில் ஒருவன் கத்தி ஒன்று மறைத்து வைத்திருப்பதையும் கண்ட போலீசார் அதனை கைப்பற்றி அவர்கள் மூவரையும் பாப்பநாடு காவல் நிலையம் அழைத்து சென்று ஆய்வாளர் திரு .கருணகரன் மற்றும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டார்கள்.
இதில் பிடிபட்ட மூவரில் ஒருவனான திருநெல்வேலி மாவட்டம் மேலசீவல் பகுதியில் வசித்து வரும் பிச்சை என்பவரின் மகன் பிரபல ரவுடி லட்சுமண காந்தன் என்கின்ற கருப்பா 25. என்பவன் தென் மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, ஆகிய மாவட்டங்களில் பல்வேறு கொலை,கொள்ளை வழக்குகளில் தொடர்பு உடையவன் என்பதும், இவன் மீது பல வழக்குகள் நிலுவையில் உள்ளது.
இவன் சமீப காலத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட துரைமுத்து என்பவரின் கூட்டாளி என்பதும்,
இவனது கூட்டாளிகளான மற்ற இருவரும் தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த ஒரத்தநாடு வட்டம் பாப்பாநாடு திருநல்லூர் நடுத்தெருவில் வசித்து வரும் ராமையா மகன் மோகன் 21. மற்றும் கபிஸ்தலம் குயவன் தெருவில் வசித்து வரும் இளங்கோ மகன் முத்தமிழ் செல்வன் 29. என தெரிய வந்தது.
அதனை தொடர்ந்து பிடிபட்ட ரவுடி லட்சுமண காந்தன் என்கின்ற கருப்பாவை விசாரித்ததில் தஞ்சை மாவட்ட நண்பர்கள் அழைத்ததால் பாப்பாநாடு அருகே உள்ள ஒரு முக்கிய நபரை கொலை செய்ய திட்டம் தீட்டி அதற்காக வந்துள்ளதாக தெரிய வந்தது .
அதனை தொடர்ந்து அவனையும் கூட்டாளிகள் இருவரையும் கைது செய்து பாப்பாநாடு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து போலீசார் மேலும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
போலீஸ் நியூஸ் பிளஸ் செய்தியாளர்