தஞ்சாவூர் : தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே திருப்புறம்பியம் ஊரில் உள்ள சீனிவாசபெருமாள் கோவிலில் கடந்த 10.02.2020 ம் தேதி இரவு 3 உலோக சிலைகள் கொள்ளை அடிக்கப்பட்டதை தொடர்ந்து தஞ்சாவூர் சரக காவல் துணைத் தலைவர் முனைவர் திரு.J.லோகநாதன் IPS, மாவட்ட கண்காணிப்பாளர் திரு.S.S.மகேஸ்வரன், ஆகியோர் உத்தரவுபடி கும்பகோணம் காவல் துணை கண்காணிப்பாளர் திரு. ஜெயச்சந்திரன் அவர்களின் மேற்பார்வையில் உதவி ஆய்வாளர் திரு. கீர்த்திவாசன் தலைமையில் SSI- செல்வகுமார், ராஜா, HC-ரமேஷ், சுரேஷ், சிவசங்கர், சண்முகம், ஜம்புலிங்கம், கதீஸ், உமாபதி ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் மேற்படி வழக்கு தொடர்பாக மதுரை, தேனி, சென்னை, காஞ்சிபுரம் ஆகிய இடங்களில் சென்று விசாரித்தும், தகவல்கள் சேகரித்தும் (சம்பவம் நடைபெற்று 28 நாட்களுக்குள்) குற்றவாளிகளான 1)ராமலிங்கம் 2) மெல்வின் சகாயராஜ் 3)கமல் ராஜ் 4)ராஜாத்தி ஆகியோரை கைது செய்து விலை மதிப்பற்ற 3 உலோக சிலைகளை அதிரடியாக மீட்டனர்.
இதனை இப்பகுதி பொதுமக்கள் பாராட்டி வருகின்றார்கள்.
நமது செய்தியாளர்
குடந்தை
ப-சரவணன்
கும்பகோணம்