தஞ்சை: தஞ்சை மாவட்டம் பாபநாசம் உட்கோட்டத்தில் அம்மாபேட்டை காவல் சரகத்திற்குட்பட்ட பகுதியான பட்டுக்கோட்டை பைபாஸ் சாலையில் கடந்த மாதம் 28 -7-2023 அன்று இரவு இரு சக்கர வாகனத்தில் வந்த (கணவன்,மனைவி ) தம்பதிகளை வழிமறித்த ஒரு நபர் கணவரை அறிவாளால் வெட்டி விட்டு அவரது மனைவி அணிந்திருந்த தாலிச் செயினை பறித்து சென்றதாகவும், இது போல் மீண்டும் இரு தினங்களுக்குப் பிறகு அதே பகுதியில் சென்ற ஒரு இருசக்கர வாகனத்தை மறித்து அதில் வந்தவர்களை கத்தியால் குத்தி விட்டு அவர்கள் வைத்திருந்த பணம் மற்றும் செல்போன்களை பறித்து சென்றதாகவும் புகார்கள் வந்ததை தொடர்ந்து தஞ்சை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திரு . ஆசிஷ்ராவத் ஐபிஎஸ் அவர்கள் இக்குற்றச் செயல்களில் ஈடுபட்டு வரும் குற்றவாளியை இனம் கண்டு உடனடியாக கைது செய்ய உத்தரவிட்டார்.
இதனை தொடர்ந்து பாபநாசம் உட்கோட்டம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் திருமதி .பூரணி அவர்கள் மேற்பார்வையில் உதவி ஆய்வாளர்கள் திரு. முத்துக்குமார் திரு. ராஜேஷ் குமார் மற்றும் தலைமை காவலர் பிரபு , காவலர்கள் விஜயகுமார், சந்தோஷ், பிரபாகர் ஆகியோர் அடங்கிய தனிப்படை போலீசார் சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு சென்று அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா மற்றும் செல்போன் நம்பர்களை ஆய்வு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டார்கள்.
இந்த தேடுதல் வேட்டையில் கிடைத்த தகவலின் படி மேற்படி வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்டவர் வல்லம் அருகிலுள்ள எம்ஜியார் நகரை சேர்ந்த மகேந்திரன் மகன் சூர்யா ( 23) என்பது தெரிய வந்தது மேற்படி வழிப்பறி வழக்கில் குற்றவாளியான அந்நபர் திருச்சி அருகே பதுங்கி இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் அங்கு இன்று (8-8-2023) சென்ற தனிப்படை போலீசார் மேற்படி நபரை சுற்றி வளைத்து கைது செய்தார்கள், மேலும் அவரிடம் இருந்து இரண்டு பட்டாக்கத்திகள் மற்றும் (பறித்துக் சென்ற) தாலி செயின் ஒன்று , மூன்று செல்போன்கள் மற்றும் ஒரு இரு சக்கர வாகனம் (ஆர் ஒன்பைவ் ) ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு வழக்கு பதிவு செய்து அந்நபரிடம் விசாரணை மேற்கொண்டதில் சூர்யா எனும் இந்நபர் மீது வல்லம் , தமிழ் பல்கலைக்கழகம் மற்றும் தஞ்சாவூர் நகர காவல் நிலையங்களில் பல வழிப்பறி வழக்குகள் நிலுவையில் இருந்து வருகின்றன என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
போலீஸ் நியூஸ் பிளஸ் செய்தியாளர்
குடந்தை-ப-சரவணன்