தஞ்சை: தஞ்சை பகுதியில் போலி மது தயாரித்து விற்பனை நடைபெறுவதாக வந்த ரகசிய தகவலின் அடிப்படையில் அதனை தடுக்க போலீசார் தீவிர கண்காணிப்பை மேற்கொள்ள வேண்டும் என தஞ்சை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திருமதி .ரவளி பிரியா. ஐபிஎஸ் அவர்கள் உத்தரவின் படி தஞ்சை தனிப்படை போலீஸ் உதவி ஆய்வாளர் ராஜேஷ் குமார், தலைமை காவலர் உமாசங்கர் மற்றும் காவலர்கள் கௌதம், அருண்மொழிவர்மன், அழகுசுந்தரம், நவீன் ,சுஜித் ஆகியோர்கள் அடங்கிய தனிப்படை போலீசார் தீவிர போலி மது நடமாட்டத்தை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தார்கள்.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் தஞ்சை தனிப்படை போலீசாருக்கு தஞ்சை மாவட்டம் துலுக்கம்பட்டி அருகே போலி மதுபானம் தயாரிக்கும் ஆலை ஒன்று செயல்பட்டுக் கொண்டிருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது .
அதன் அடிப்படையில் தஞ்சை தனிப்படை போலீசார் அதிரடியாக நேற்று அப்பகுதிக்கு சென்று போலி மதுபான ஆலையை சுற்றி வளைத்து அங்கு போலி மதுபானத்தை தயாரித்து கொண்டிருந்த ஆறு நபர்களையும் அதிரடியாக கைது செய்தார்கள் மேலும் அந்த ஆலையில் இருந்த மதுபான பாட்டில் மூடி அடைக்கும் இயந்திரம் மற்றும் விற்பனைக்கு தயராக உள்ள நிலையில் -180 எம்எல் மதுபானபாட்டில்கள் 700 மற்றும் காலி பாட்டில்கள் 1500 அதற்கு தேவையான லேபில்கள், மூடிகள் மற்றும் டாடா இண்டிகோ கார் ஒன்று ஆகியவற்றை கைப்பற்றி தீவிர விசாரணை மேற்கொண்டார்கள்.
இதில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளது,
கைதானவர்களில் காரைக்கால் நேரு நகரை சேர்ந்த கோவிந்தராஜ் மகன் பாபு ( எ) விஜயகுமார் (42 ) இவன் காரைக்காலில் கொடுரமாக வெட்டி கொல்லப்பட்ட பிரபல ரவுடி ராமுவின் அக்கா மகன் என்பதும், இவர் மீது பல வழக்குகள் நிலுவையில் உள்ளதும், அவனின் நண்பர் காரைக்கால் கோவில்பத்து பகுதியை சேர்ந்த செல்லப்பன் மகன் பழனியப்பன் (38) ஆகிய இருவரும் போலி மதுபானம் தயாரிக்க பயன் படும் ஸ்பிரிட்டை விற்பனை செய்யும் வியாபாரிகள் ஆவார்கள், இவர்களின் நண்பர்களான தஞ்சாவூர் கண்டிதம்பட்டு -கொத்தவால் சாவடி வடக்கு தெருவை சேர்ந்த ஜார்ஜ் மகன் மெல்வின் சகாராஜ் (41) இவர் மீது சிலை கடத்தல் மற்றும் பல திருட்டு வழக்குகளும் நிலுவையில் உள்ளது, மேலும் இவர் மூன்று குண்டாஸ் வழக்குகளில் தண்டனை பெற்றவர் என்பதும் தெரிய வந்ததுள்ளது, இவரின் நண்பர்களான திருவாரூர் மாவட்டம் திருக்கண்ணமங்கை கொத்தன்தெரு செல்வம் மகன் சூளை(எ)முத்துக்குமார் பல கொலை வழக்குகளில் சம்பந்தப்பட்டவர் இவரின் மீதூம் பல வழக்குகள் நிலுவையில் உள்ளது என்பதும், தஞ்சாவூர் மாரியம்மன் கோவில் காமாட்சி அம்மன் நகரை சேர்ந்த காசு பாண்டியன் மகன் அருண் பாண்டியன் (32) மற்றும் தஞ்சாவூர் விளார் ரோடு நாவலர் நகரை சேர்ந்த சேகர் மகன் அறிவழகன் (30) இவரின் மீதும் பல கொலை வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தஞ்சை தனிப்படை போலீசார் விசாரணையில் தெரிய வந்ததுள்ளது
அதனை தொடர்ந்து கைது செய்த குற்றவாளி களை தஞ்சை தமிழ் பல்கலைக்கழக காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து வழக்கு பதிவு செய்து காவல் துறையினர் மேலும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
போலி மதுபான ஆலையை நடத்தி வந்த பல கொலை வழக்குகளில் சம்பந்தப்பட்ட இக்குற்றவாளிகளை துடிப்புடன் செயல்பட்டு விரைவாக கைது செய்த மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரின் தனிப்படை போலீசாரை காவல் துறை உயர் அதிகாரிகள் பாராட்டினார்கள்.
போலீஸ் நியூஸ் பிளஸ் செய்தியாளர்