தஞ்சை: கடந்த வாரம் தஞ்சையில் இருந்து நாகை செல்லும் சாலையில் மாரியம்மன் கோவில் அருகே பூண்டி தனியார் கல்லூரி பேராசிரியர் தனது ஸ்கூட்டி வாகனத்தில் செல்லும் போது அவரை வண்டியிலிருந்து உதைத்து கீழே தள்ளி விட்டு அவர் அணிந்திருந்த தாலி சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பி ஓடிவிட்டனர் இதில் அவர் பலத்த காயமடைந்து முகம் மற்றும் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது அதனை தொடர்ந்து அவர் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரியில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப் பட்டு அவர் தந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
அதனை தொடர்ந்து தஞ்சை மாவட்ட பகுதிகளில் இருசக்கர வாகனத்தில் வந்து தொடர் செயின் பறிப்பு ,வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டு வந்த நபர்களை இனம் கண்டு அவர்களை உடனடியாக கைது செய்ய தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தஞ்சை தனிப்படை போலீசாருக்கு உத்தரவு பிறப்பித்தார்கள் அதன் பேரில்
தனிப்படை உதவி ஆய்வாளர் திரு. ராஜேஷ்குமார் மற்றும் தலைமை காவலர் உமாசங்கர் ராஜேஷ் மற்றும் காவலர்கள் அருண்மொழிவர்மன் நவீன் அழகு சுந்தரம் மற்றும் சுஜித் ஆகியோர் அடங்கிய தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டார்கள்.
இதில் தஞ்சை பகுதிகளில் உள்ள சுமார் 300 க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களை ஆராய்ந்து பார்த்ததில் இந்த செயின் பறிப்பு சம்பவத்தில் பயன்படுத்திய வாகனம் பல்சர் ns200 வண்டி என்பது தெரிய வந்ததை தொடர்ந்து அதில் முகமூடி அணிந்த வந்த இரு நபர்கள் நாகப்பட்டிணம் முதலித் தெருவை சேர்ந்த ராஜா மகன் அகத்தியர் (எ)ராஜசேகர் (24) ,சீர்காழி மீனவர் காலனி பகுதியை சேர்ந்த சந்திரன் மகன் ஜவகர் (21) மற்றும் அவர்களின் நண்பன் இந்த வழிபறி சம்பவங்களுக்கு மூளையாக செயல் பட்டு வந்த நபர் நாகப்பட்டிணம் நாம்பியார் நகரை சேர்ந்த முருகன் மகன் சிட்டு (எ) பிரகாஷ்ராஜ் 22 இவர் மீது சுமார் இருபது வழிபறி மற்றும் திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளதும் என்பது தெரிய வந்தது.
இதனை தொடர்ந்து இம்மூன்று நபர்களையும் தேடி வந்த நிலையில் தனிப்படை போலீசாருக்கு இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் பூம்புகார் மற்றும் காரைக்காலில் மறைந்து இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதனை தொடர்ந்து தனிப்படை போலீசார் உடனடியாக காரைக்கால் மற்றும் பூம்புகார் பகுதிகளுக்கு சென்று அங்கு மறைந்து இருந்த குற்றவாளிகளையும் அவர்கள் பயன்படுத்திய இருசக்கர வாகனங்கள் இரண்டு( ns200 மற்றும் பல்சர் 220 ) செல்போன்கள் மற்றும் சுமார் 12 பவுன் தாலி சங்கிலி ஆகியவைகள் பறிமுதல் செய்யப்பட்டு அவர்களை கைது செய்தார்கள். அதனை தொடர்ந்து குற்றவாளிகளிடம் தஞ்சை தாலுக்கா காவல் நிலைய ஆய்வாளர் திரு ஜெகதீசன் அவர்கள் மேலும் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
போலீஸ் நியூஸ் பிளஸ் செய்தியாளர்