தஞ்சை : தஞ்சை மாவட்டம் மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு அரசு மதுபான கடைகள் இன்று விடுமுறை என்பதால் தஞ்சை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திரு.ஆஷிஸ்ராவத் IPS அவர்கள், தஞ்சை மாவட்டம் முழுவதும் சாராய விற்பனையை கண்காணிக்க உத்தரவிட்டார்கள் அதனை தொடர்ந்து கும்பகோணம் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திரு.மகேஷ்குமார் TPS அவர்களின் மேற்பார்வையில் தனிப்படை உதவி ஆய்வாளர் திரு.கீர்த்தி வாசன் , பட்டீஸ்வரம் உதவி ஆய்வாளர் திரு.கோவிந்தராஜ் மற்றும் தனிப்படை சிறப்பு உதவி ஆய்வாளர்கள் ராஜா, செல்வகுமார் HC பாலசுப்ரமணியம் ,நாடிமுத்து, செந்தில்குமார், ஜனார்த்தனன், ராஜ்குமார் ஆகியோர் கொண்ட தனிப்படை போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தார்கள் . இந்நிலையில் கும்பகோணம் அடுத்துள்ள பட்டீஸ்வரம் பகுதியில் சாராயம் விற்பனை நடைபெறுவதாக தகவல் கிடைத்ததை தொடர்ந்து அங்கு சென்ற தனிப்படை போலீசார் அதிரடியாக நடத்திய சாராய வேட்டையில் 110 பாண்டிச்சேரி மாநில சாராய பாக்கெட்களை கைப்பற்றினார்.
அதனை விற்று வந்த பட்டிஸ்வரம் அனியாமங்களம் பகுதியை சேர்ந்த ராஜகோபால் மகன் கிருஷ்ணமூர்த்தி (55), மற்றும் அதே பகுதியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன் கோபாலகிருஷ்ணன் (30), பட்டிஸ்வரம் கொருக்கை பகுதியை சேர்ந்த வேலு மகன் கலியமூர்த்தி (63), ஆகியோரை பிடித்து தீவிர விசாரணை மேற்கொண்டார்கள் அவர்கள் தந்த தகவலின் அடிப்படையில் நாச்சியார்கோவில் காவல் சரகத்திலுள்ள பிலாஞ்சேரி என்ற கிராமத்தில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து அதனை சாராய குடோனாக பயன்படுத்தி வந்ததுள்ளார்கள் என்பது தெரிய வந்ததை தொடர்ந்து அங்கு சென்ற தனிப்படை போலீசார் அந்த வீட்டில் இருந்த சுமார் 275 பாண்டிச்சேரி சாராய பாக்கெட்டுகள், 20 டாஸ்மாக் பிராந்தி பாட்டில்கள் , பணம் ரூபாய்.16,700/-, மற்றும் சாராய பாக்கெட்டுகள் தயார் செய்ய பயன்படுத்திய மிஷின்கள், பிளாஸ்டிக் பைகள், சாராய கேன்கள் ஆகியவைகள் கைப்பற்றி இதில் தொடர்புடைய மேற்கண்ட மூன்று நபர்களையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள் .
போலீஸ் நியூஸ் பிளஸ் செய்தியாளர்