தஞ்சாவூர் : தஞ்சாவூர் மாவட்ட நெடுஞ்சாலைகளான வல்லம் மற்றும் பாபநாசம் , மெலட்டூர் அய்யம்பேட்டை , அம்மாபேட்டை ஆகிய இடங்களில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு இரவு நேரங்களில் தொடர்ச்சியாக இருசக்கர வாகனங்களில் செல்பவர்களை குறி வைத்து இரண்டு இருசக்கர வாகனங்களில் சில நபர்கள் வந்து கத்தியை காட்டி, மிரட்டியும், தாக்கியும் அவர்களிடம் உள்ள பணம் , செல்போன், லேப்டாப், நகைகள் , ஆகியவற்றை பிடுங்கி வழிபறிகள் நடைபெற்று வருவதாக தஞ்சை மாவட்டம் பாபநாச உட்கோட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் திருமதி.பூரணி, அவர்களுக்கு வந்த புகார்களின் அடிப்படையில் இக்குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருபவர்களை உடனடியாக கண்டுபிடித்து கைது செய்ய போலீசாருக்கு உத்தரவிட்டார்.
அதனை தொடர்ந்து அய்யம்பேட்டை காவல் ஆய்வாளர் திருமதி வனிதா தலைமையில் கபிஸ்தலம் உதவி ஆய்வாளர் திரு முத்துக்குமார் மற்றும் அய்யம்பேட்டை காவல் உதவி ஆய்வாளர் திரு ராஜேஷ் குமார் மற்றும் காவலர்கள் திரு பிரபு திரு விஜயகுமார , அன்பரசன் ஆகியோர்கள் அடங்கிய தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மற்றும் தேடுதல் வேட்டையை மேற்கொண்டு வந்தார்கள்.
இதில் செல்போன் எண்கள் மற்றும் CCTV கேமராவை ஆய்வு செய்ததில் மேற்படி நெடுஞ்சாலையில் வழிப்பறி செய்தவர்கள் திருச்சி மாவட்ட பகுதியை சேர்ந்தவர்கள் என தெரிய வந்ததை தொடர்ந்து உடனடியாக திருச்சிக்கு சென்ற தனிப்படை போலீசார் மூன்று நாட்கள் அப்பகுதியில் முகாமிட்டு தேடி வந்த நிலையில் வழிபறி கொள்ளையர்கள் நால்வர் திருச்சி திருவானைக்காவல் ஸ்ரீரங்கம் கொள்ளிடம் ஆற்றுப்பகுதியில் பதுங்கி இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது.
அதனை தொடர்ந்து அப்பகுதிக்கு சென்று அங்கு பதுங்கி இருந்த சர்க்கார் பாளையத்தில் வசித்து வரும் ராஜமாணிக்கம் மகன் நாகேஷ் வயது (20),தாளக்குடியில் வசித்து வரும் வீரப்பன் மகன்சுரேஷ் (35), கீழ கொண்டயம்பேட்டை பகுதியில் வசித்து வரும் தயாளன் மகன் சீனிவாசன்(20), மற்றும் அதே பகுதியை சேர்ந்த சங்கிலி மகன் கண்ணன் ( 22 ) ஆகியோரை சுற்றி வளைத்து அதிரடியாக கைது செய்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் திருச்சி மற்றும் அரியலூர் செங்கல்பட்டு தஞ்சாவூர் ஆகிய பகுதி நெடுஞ்சாலைகளில் இரவு சுமார் 12 மணிக்கு மேல் இரு சக்கர வாகனங்களில் செல்பவர்களிடம் கத்தியை காட்டி மிரட்டி நகை பணம் மற்றும் பொருள்களை கொள்ளையடிப்பது வழக்கமாகக் கொண்டவர்கள் என்பது தெரிய வந்தது.
இவர்கள் மீது திருச்சி ஸ்ரீரங்கம் மற்றும் திருவரம்பூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய காவல் நிலையங்களில் சுமார் பத்துக்கும் மேற்பட்ட வழிபறி வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரிய வந்தது .மேலும் இவர்களிடமிருந்து இரண்டு இரு சக்கர வாகனம் , இரண்டு வீச்சருவாள் ,10 செல்போன்கள் மற்றும் ஒரு மடிக்கணினி மற்றும் ரூபாய் பத்தாயிரம் ரொக்க பணம் ஆகியவை கைப்பற்றி அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள்.
போலீஸ் நியூஸ் பிளஸ் செய்தியாளர்
குடந்தை-ப-சரவணன்