தஞ்சாவூர்: தஞ்சை பகுதியில் குற்றச் செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகளை இனம் கண்டு அவர்களை கைது செய்ய வேண்டும் என தஞ்சை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திருமதி . ரவளிப் பிரியா ஐபிஎஸ் உத்தரவின் படி
மாவட்ட காவல் கண்காணிப்பா ளர் தனிப்படை உதவி ஆய்வாளர் திரு ராஜேஷ்குமார் சிறப்பு உதவி ஆய்வாளர் திரு மோகன் தலைமை காவலர் திரு உமாசங்கர் மற்றும் காவலர்கள் அருண்மொழி அழகு சுந்தரம் நவீன் மற்றும் சுஜித் ஆகியோர்கள் அடங்கிய தஞ்சை சரக தனிப்படை போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தார்கள்.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் தனிப்படை போலீசாருக்கு தஞ்சை மானோஜிப்பட்டி பகுதியில் பயங்கரமான ஆயுதங்களுடன் ஒரு நபர் சுற்றி வருவதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதனை தொடர்ந்து இன்று மானோஜிப்பட்டிக்கு சென்ற தனிப்படை போலீசார் பயங்கரமான ஆயுதங்களுடன் சுற்றி திரிந்த அந்தோணியார் கோவில் தெருவில் வசித்து வரும் அந்தோணிசாமி மகன் மைக்கேல் ராஜ்-(34) என்பவரை கைது செய்து தஞ்சை அரசு மருத்துவ கல்லூரி காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று அங்கு வழக்கு பதிவு செய்து நிலைய காவல் காவல் ஆய்வாளர் திரு. பிரங்க்ளின் மேற்கொண்ட தீவிர விசாரணையில் பிடிபட்ட நபர் தஞ்சை மாவட்ட பகுதிகளில் பல வழக்குகளில் சம்பந்தபட்ட
பிரபல ரவுடி மானோஜிப்பட்டி சங்கரின் கூட்டாளி இவர் என்பதும் மேலும் இவர்கள் இருவரும் இணைந்து ஒரு கொலைக்கான சதி திட்டம் தீட்டி வந்ததும் விசாரணையில் தெரிய வந்தது.
அதனை தொடர்ந்து ஆயுதங்களுடன் பிடிபட்ட மைக்கேலிடம் போலீசார் மேலும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
போலீஸ் நியூஸ் பிளஸ் செய்தியாளர்