தஞ்சாவூர் : தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் உட்கோட்டம் பாபநாசம் புறப்பகுதிகளில் செல்லும் வயதானவர்களை குறி வைத்து சிலர் அவர்களிடம் கத்தியை காட்டி மிரட்டி அவர்களிடம் உள்ள பணம் மற்றும் செல்போன் போன்றவற்றை பறித்து தொடர் வழிப்பறிகள் நடைபெற்று வருவதாக புகார்கள் வந்ததை தொடர்ந்து இது போன்ற குற்றச் செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகளை இனம் கண்டு உடனடியாக கைது செய்ய தஞ்சை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திரு.ஆசிஷ் ராவத் ஐ.பி.எஸ், அவர்களின் உத்தரவின்படி பாபநாசம் உட்கோட்ட துணை காவல்துறை கண்காணிப்பாளர் திருமதி. பூரணி அவர்களின் மேற்பார்வையில் அய்யம்பேட்டை காவல் உதவி ஆய்வாளர் திரு. ராஜேஷ்குமார், மற்றும் கபிஸ்தலம் சிறப்பு உதவி ஆய்வாளர் திரு. அன்பு நம்பியார், மற்றும் காவலர் பிரபாகர், ஆகியோர் அடங்கிய தனிப்படை போலீசார் இப்பகுதிகளில் உள்ள CCTV கேமரா மற்றும் செல்போன்களை ஆராய்ந்து தீவிர தேடுதல் வேட்டை மேற்கொண்டு வந்தார்கள். இந்நிலையில் தனிப்படை போலீசாருக்கு திருமண்டக்குடி சர்க்கரை ஆலை அருகே பாழடைந்த குடியிருப்பு ஒன்றில் இருவர் பதுங்கி இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் (12 – 6- 2023 ) அங்கு சென்ற போலீசார் அந்த வீட்டில் பதுங்கிருந்த இருவரை சுற்றி வளைத்து மடக்கி பிடித்து விசாரணை மேற்கொண்டார்கள்.
இதில் பாபநாசம் பகுதிகளில் தொடர் வழிப்பறியில் ஈடுபட்டு வந்தது இவர்கள் தான் என தெரிய வந்தது. மேலும் பிடிப்பட்ட இருவரில் ஒருவர் சென்னை மேடவாக்கம் பெருமாள் கோவில் தெருவில் வசித்து வரும் குமார் மகன் டெல்லி என்கின்ற டெல்லிதுரை (23) என்பதும் இவர் மீது சென்னை தாம்பரம் மற்றும் மேடவாக்கம் மற்றும் வியாசர்பாடி ஆகிய காவல் நிலையங்களில் பல்வேறு கொலை முயற்சி ,கஞ்சா விற்பனை , அடிதடி வழக்குகள் பல நிலுவையில் உள்ளது என்பதும் ,இவரை சென்னை போலீசார் தேடி வருகிறார்கள் அதனால் அங்கிருந்து தப்பித்து தற்போது கும்பகோணம் அருகே திருமண்டக்குடி அண்ணா நகரில் உள்ள கண்ணன் என்பவரது வீட்டில் தங்கியிருப்பது தெரிய வந்தது மேலும் இவருடன் இருந்த மற்றொருவர் கும்பகோணம் அருகிலுள்ள மாடகுடி மில்தெருவில் வசித்து வரும் சிவக்குமார் மகன் பிரவீன் (23) என்பதும் தெரிய வந்தது. இதனை தொடர்ந்து இருவரையும் கைது செய்து மேற்படி நபர்களிடம் இருந்து ரூபாய் 5000 ரொக்கம், இரண்டு பட்டாகத்தி மற்றும் நான்கு தொலைபேசிகள், இரண்டு இரு சக்கர வாகனங்கள் கைப்பற்றப்பட்டு. இவர்கள் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
போலீஸ் நியூஸ் பிளஸ் செய்தியாளர்
குடந்தை-ப-சரவணன்