தஞ்சை: தஞ்சை மாவட்டத்தில் போதை பொருள்கள் நடமாட்டத்தை முழுமையாக தடுக்க தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.ரவளி பிரியா, IPS அவர்கள் உத்தரவுபடி, தனிப்படை போலீஸ் உதவி ஆய்வாளர் திரு ராஜேஷ் குமார் , தலைமை காவலர்கள் உமாசங்கர் ராஜேஷ் மற்றும் காவலர்கள் அருள்மொழி நவீன் அழகு மற்றும் சுஜித் அடங்கிய தனிப்படை போலீசார் போதைப் பொருள் நடமாட்டத்தை தடுக்க தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தார்கள்.
இந்நிலையில் பட்டுக்கோட்டை மற்றும் அதிராம்பட்டினம் சுற்றியுள்ள பகுதிகளில் கஞ்சா விற்பனை நடப்பதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனை தொடர்ந்து, பட்டுக்கோட்டை சென்ற போலீசார் அப்பகுதியில் உசிலம்பட்டியில் இருந்து கஞ்சா வாங்கி வந்து பட்டுக்கோட்டை பகுதியில் வியாபாரம் செய்து வந்த பட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்த கண்ணன் மகன் ரிசிக்குமார்( 23) என்கின்ற வாலிபரை சுற்றி வளைத்தது கைது செய்தது, இவரிடம் சுமார் இரண்டு கிலோ கஞ்சா மற்றும் ஒரு இரு சக்கர வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டு அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள் .
போலீஸ் நியூஸ் பிளஸ் செய்தியாளர்
குடந்தை-ப-சரவணன்